பிசாசியல் DEMONOLOGY எவன்ஸ்வில் விளையாட்டு அரங்கு, எவன்ஸ்வில் இந்தியானா, அமெரிக்கா 53-11-20 1. அறிக்கை, ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டு, நான் முதலில் மனமாற்றம் அடைந்த போது, நான் அந்த ஜனங்களை, முழு சுவிசேஷ ஜனங்களைச் சந்தித்த போது, அங்கே ஏதோவொன்று வித்தியாசமாக உள்ளது என்று நான் எப்போதுமே என்னுடைய இருதயத்தில் உடையவனாகவே இருந்தேன். கர்த்தருடைய தூதனானவர் என்னைச் சந்தித்து. 2. நான் முதலில் ஆரம்பித்த போது, என்னுடைய முற்கால கூட்டங்களில் எத்தனை பேர் இருந்தீர்கள்? நான் முதலில் தொடங்கிய போதுள்ள என்னுடைய முதலாவது கூட்டங்களில் இருந்தவர்கள் யாராவது இங்கேயிருக்கிறீர்களா? நான் எப்படியாக ஜனங்களை கரங்களால் பிடித்தேன், உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? சரி. அது சம்பவித்தது என்று நான் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், நான் உத்தமமாக இருந்தால், அது சம்பவிக்கும் என்றும், பிறகு, நான் - நான் ஜனங்களுடைய இருதயத்திலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்வேன் என்றும் அவர் என்னிடம் கூறினதாக நான் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர் அதைக் கூறினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்பொழுது, அது கிரியை செய்யவில்லை, அது அப்போது இல்லாதிருந்தது, ஆனால் அவர், அது கிரியை செய்யும்” என்று சொன்னார். நல்லது, இப்பொழுது, அது சம்பவித்து விட்டது. அவர் என்னிடம் கூறினார்.... நான் அவரிடம் சொன்னேன், நான், "நான் அதைக் குறித்து வினவினேன்,” என்று கூறினேன். அதற்கு அவர், "நான் உன்னோடு கூட இருப்பேன்,” என்றார். நல்லது, அவர் இங்கே இருந்தார் என்று நான் அறிந்திருக்கிற ஆறுதலாக அது எப்போதுமே இருந்து வருகிறது. 3. ஜனங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் ஏன் தன் முயற்சியின் பாகத்தை எடுத்துக் கொள்வதில்லை. நீர் அங்கே வெளியே சென்று, அந்தப் பாகத்தை எடுத்து, சத்துருவைக் கடிந்து கொள்ளும்” என்று கூறுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். நான் அதைச் செய்ய பயந்திருந்தேன். ஏனென்றால் நான் - நான் நினைத்தேன், ஒருக்கால், நான், நான் ஒருக்கால் கண்டிருக்கக்கூடாத காரியத்தைக் கண்டிருந்தேனோ என்று நினைத்திருந்தேன். 4. நண்பர்களே, இது ஒரு - ஒரு நாடக, மேடைக் காட்சியாக இல்லை என்பதை முழு உத்தமத்தோடும் உணருகிறேன். நாம் சபையில் இருக்கிறோம், அது - அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள்... என்று நான் கூறினால், அது ஜனங்களின் மேலிருக்கிற பிசாசின் ஆவிகளாக இருக்கின்றன. இப்பொழுது, நான்.... என்று கூறக்கருதவில்லை. நீங்கள், "நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன், சகோதரன் பிரன்ஹாமே. என்னிடம் எந்த பிசாசும் இல்லை” என்று கூறலாம். 5. நல்லது இப்பொழுது, நான், "பிசாசு பிடித்திருக்கிறது” என்று சொல்லவில்லை, அது, "பிசாசின் அட்டூழியமாக இருக்கிறது," நீங்கள், பாருங்கள். மாம்சத்தில் சாத்தான், ஆவியிலுள்ள சாத்தான் அல்ல. ஆவியிலுள்ள சாத்தான் அசுத்தமான பழக்க வழக்கங்களையும் அதைப்போன்ற மற்ற காரியங்களையும், அவிசுவாசத்தையும் கொடுக்கிறான். நீங்கள் அவ்வளவு சுத்தமாகவும், பரிசுத்தமாகவும், தூய்மையாகவும் ஜீவித்தும், ஒரு பாவியாக இருக்கலாம். அது உங்களை இரட்சிக்கிற உங்கள் விசுவாசமாக இருக்கிறது. பாருங்கள். அநேக ஜனங்கள், அவர்கள் அவ்வளவு தூய்மையாகவும் சுத்தமாகவும் இருந்தும், அவர்கள் சில சமயங்களில் கிறிஸ்தவர்களாக ஜீவிக்கிறோம் என்று வெளிப்படையாக கூறிக்கொள்ளும் ஜனங்களைக் காட்டிலும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பரிசுத்த ஆவியை மறுதலிப்பார்கள், அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு வல்லமையான கிரியைகளையும் மறுதலிப்பார்கள்; அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாக இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் அவிசுவாசிகளாக இருக்கிறார்கள். அந்திக் கிறிஸ்துவின் ஆவியானது மிகவும் பக்தியுள்ள ஒரு ஆவியாக இருக்கிறது, அப்படியே முத்திரை போடுவதற்கு, அது எவ்வளவு கூடுமோ அவ்வளவு பக்தியுள்ளதாக இருக்கும், அதுதான் அந்திக்கிறிஸ்து. இயேசுவும்கூட, "கடைசி நாளில், கூடுமானால், அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று கூறியிருக்கிறார். அது உண்மை. இப்பொழுது, எனவே பிறகு, நீங்கள் எங்கே - நீங்கள் எங்கே அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எதனிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளும்படி அது உங்களுக்கு அவசியமாயிருக்கிறது. 6. இப்பொழுது, நான் இதை அதிகமாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறேன், நான் என்னுடைய ஜீவியத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினரிடம் அறிந்தே (audience) ஒரு போதும் வெளிப்படையாக கூறியிராத ஒரு காரியத்தை நான் உங்களிடம் கூறப் போகிறேன், சிலசமயங்களில், அது ஆவியானவரின் கீழ் இருந்தாலொழிய, ஏனென்றால் நான் காரியங்களைச் செய்கிறேன், அப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையே அறியாமல் இருக்கிறேன். 7. ஆனால் மேடையின் மேல் அநேக, அநேக நேரங்களில், நபரை விட்டு வெளியேறுகிற ஆவியைக் காண்கிறேன். அவைகள் எல்லாவிதமான வடிவங்களிலும் இருக்கின்றன. பிசாசுகளோடு தனிப்பட்ட முறையில் நான் தொடர்பு கொள்வதைக் குறித்து, அதைக் குறித்து நானாகவே அறிந்திருப்பவைகளைப் பற்றி, பிசாசியலின் பேரில் ஒரு புத்தகத்தை தயார் செய்து வருகிறேன்; அவைகள் ஜீவனுள்ளவைகளாக இருக்கின்றன. கிறிஸ்தவ விஞ்ஞானம் கூறுவது போன்று, அவைகள் வெறும் எண்ணம் அல்ல. அது உண்மையாகவே ஒரு ஜீவனாக இருக்கிறது. அது நபரை விட்டு வெளியேறும் போது, நீங்கள் அதை ஒரு கறுத்த நிழலாகக் காணலாம். நான் - நான் அவைகளைக் கண்டிருக்கிறேன், அவைகளில் சில ஏறக்குறைய அவ்வளவு நீளமுடைய வௌவால்களைப் போன்று காணப்படுகின்றன, அவைகள் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் நீளமான மயிர்களை உடையவைகளாக இருக்கின்றன. நான் அதைப்போன்று அவைகளைக் கண்டிருக்கிறேன், அவைகள் ஆமைகளைப் (tortoises) போன்றோ, ஐம்பது பவுண்டுகள் (சுமார் 23 கிலோகிராம் - தமிழாக்கியோன்), அல்லது ஏதோ ஓர் அளவு எடை கொண்ட, மகத்தான பெரிய சிலந்திகளைப் (spiders) போன்றோ காணப்பட்டதை நான் கண்டிருக்கிறேன், அவைகள் மகத்தான பெரிய நிழலைப்போன்று, ஜனங்களை விட்டு வெளியேறுகிறது. வழக்கமாக, அது காக்கைவலிப்பாக இருக்கிறது. 8. அது - அது சரியாக கூட்டத்தினர் (audience) மேல் போகிறது. நாம் யாரைக் குறித்துப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த சர்வவல்லமையுள்ள தேவன், நிச்சயமாக, அது ஆழமான உத்தமத்தோடு இருக்க வேண்டும், அக்காரியங்கள் கூட்டத்தினரின் மேல் அசைவதை நான் கண்டேன். சபையார் ஒரே இசைவோடு இருக்கும்போது, நான் சில சமயங்களில் அவைகளைக் கண்டிருக்கிறேன், அநேக நேரங்களில், அவர்கள் தாமே அந்தக் காரியத்தை காண்பார்கள். நூறு... நூற்றுக் கணக்கான ஜனங்கள் அது அசைவதைக் காண்பார்கள். 9. ஆகையால், அதற்கு மிகவும் ஆழமான உத்தமம் அவசியமாயிருக்கிறது. அது வெற்று வேட்டு (பொய்கூறி ஏமாற்றுதல்) அல்ல, உங்களால் பிசாசை பொய் கூறி ஏமாற்றவே முடியாது, அவன் பொய் கூறி ஏமாற்றப்பட மாட்டான். ஆனால் நீங்கள் உண்மையாகவே எப்போது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உற்பத்தி செய்ய முடிந்தாலும், சாத்தானால் அதற்கு முன்பாக நிற்க முடியாது. இப்பொழுது, அது அப்படியே அவ்வளவு உண்மையாக இருக்கிறது. 10. நல்லது இப்பொழுது, நான் அடிக்கடி வியப்படையும் காரியம் இதோ இருக்கிறது, இதை புரியும்படி விவரித்துக் கூறும்படியாக, இன்றிரவு என்னோடு பொறுத்துக் கொண்டதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் அடிக்கடி வியப்படைகிற காரியம் இதோ இருக்கிறது. இப்பொழுது, என்னுடைய சகோதரர்களே, இங்கே பின்னால் பெருங்கூட்டம் ஊழியக்காரர்களை நான் பெற்றிருக்கிறேன் என்பதைக் கவனிக்கிறேன், அவர்கள் இங்கே இருப்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நான் அடிக்கடி வியப்பு அடைவதுண்டு, ஜனங்கள் கூட்டங்களினூடாக இருந்து வருகிற இந்தக் கூட்டங்களுக்கு வந்து, அவர்கள் ஜெப வரிசை ஊடாகச் செல்வதை நான் கண்டிருக்கிறேன், அதன் பிறகு முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியும், அவர்கள் அங்கே வீட்டிலே, மேலே, ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் அசுத்த ஆவிகளினால் பீடிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கே அதனூடாக இருந்து, அவர்களுக்காக ஜெபமும் ஏறெடுக்கப் படுகிறது, அவர்களுக்காக ஜெபம், ஜெபம் ஏறெடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது, அவர்களுடைய தலையின் மேலே எண்ணெய் ஊற்றப்பட்டு, ஜெபம் செய்யப்பட்டும் இருக்கிறது, இந்த ஜெபத்தினூடாக..... ஆனாலும் அது விடாப்பிடியாக பிடித்து விடுகிறது. இப்பொழுது, அப்படியானால் எங்கோ ஏதோ காரணம் இருக்கிறது.... 11. தெய்வீக சுகமளித்தலைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் அங்கேயிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாதா? தேவனுக்கு எந்த கடினமான நோயாளியும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும். ஏன், தேவன், தாம் ஒரு பல்வலியை சுகப்படுத்துவது போன்றே அவர் அதேவிதமாகவே குஷ்டரோகத்தையும் சுகப்படுத்துகிறார். பாருங்கள்? அதெல்லாமே பரிசாரத்தின் கீழ் இருக்கிறது. ஆனால்.... நீங்கள் பாருங்கள், கட்டுரைகளை வாசிக்கும்போது, இந்த நபர் முடக்குவாதத்தினால் தாக்கப்பட்டிருந்து, சுகம் அடைந்தார். இதோ ஒருக்கால் புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருக்கிற வேறு யாரோ ஒருவர் இருந்து, அவர் அப்படியே உடல் மெலிந்துபோய் இருக்கலாம். அவர்கள் சுகமடைந்து விடுகிறார்கள். அதன் பிறகு வேறொரு நபரைக் காண்கிறீர்கள், ஒருக்கால் அவருக்கு ஒரு - ஒரு தொடர் தலைவலியோ அல்லது ஏதோவொன்றோ இருக்கலாம், அவர் அப்படியே ஜெப வரிசைக்குப் பின் ஜெப வரிசையினூடாக இருந்திருப்பார்கள். அங்கு எங்கோ ஏதோ தவறிருக்கிறது, அங்கே கட்டப்பட்டிருக்கும்படியான ஏதோ காரியம் இருக்கிறது. 12. இப்பொழுது, தேவன் எனக்குக் கொடுத்திருக்கிற இந்தச் சிறு தாழ்மையான வரத்தின் நன்மை அங்கேதான் இருக்கிறது, என்னால் அந்த நபரை தனிமையாகவும், தேவனுக்கு முன்பாக அமைதியாகவும் வைக்க முடியுமானால், என்ன காரியம் என்று அது அப்படியே சரியாக வெளிப்படுத்தும். அவர்கள் செய்திருக்காத ஏதோவொன்றோ, அல்லது அவர்கள் செய்ய வேண்டிய ஏதோவொன்றாகவோ அது இருக்கிறது. அதற்கு, எங்கோ ஏதோ காரணம் இருக்கிறது. ஆனால் நீங்கள் கட்டாயம் அதைக் கண்டுபிடித்தாக வேண்டும், அப்போது அந்த நோயாளி போய் அதைச் சரிசெய்யும் போது, அவர்கள் சுகமடைகிறார்கள். 13. எத்தனையோ தடவைகள் அது சம்பவித்திருக்கிறது? தேவனுக்கு மாத்திரமே தெரியும். ஆயிரக்கணக்கான தடவைகள், வருகிற ஜனங்கள், அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள், மற்றும் ஒவ்வொரு காரியமும், இருப்பினும், அந்த வரிசைக்குப் பின்னால், கீழே ஏதோவொரு இடத்தில், ஏதோவொன்று நடந்திருக்கும். இங்கே தான், பரிசுத்த ஆவியானவர் அதை சரியாக முழுமையாக வெளிப்படுத்தி, சரியாக அது.... என்னவென்று அவர்களிடம் கூறுகிறார். "ஏன், எனக்கு அது நினைவிருக்கிறது, அது முற்றிலும் சரியாக இருக்கிறது.” அங்கிருந்து அவர்கள் போய், அதைச் சரி செய்கிறார்கள். அது அந்த வியாதியை தீர்த்து வைத்து விடுகிறது. பாருங்கள்? நல்லது, அதுதான் காரணம் (அல்லது வியாதியோ துன்பமோ, அல்லது அது என்னவாக இருந்தாலும்), நல்லது, தேவன் கொடுத்திருக்கிற அந்தச் சிறிய வரம், அது தான் காரணம், அது சபையில் அற்புதமான விதமாக உள்ளே வருகிறது. 14. ஆனால் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிற ஜனக் கூட்டத்தினரிடம் அதைச் செய்ய போகும் போது, நல்லது, அப்போது ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் நிச்சயமாக அதே தொடர்பைக் கொண்டிருந்தாக வேண்டும், அல்லது அவர்களுக்காக ஜெபிக்கப்பட்டதாக அவர்கள் உணர மாட்டார்கள். அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். நான் அதை எட்டு வருடங்களாக முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். 15. நான் ஒவன்ஸ்போரோவில், ஆப்பிரிக்காவில், ஒருவர்... நான் இங்கே தேவனுடைய ஆவியின் கீழாக நிற்க முடிந்து, யாரோ ஒருவர் அங்கே உள்ளே உட்கார்ந்து கொண்டு இருப்பாரானால், அது ஒரு காரியத்தை பகுத்தறியும். அந்த நபருக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்பதையோ அல்லது அதைப்போன்ற வேறு ஏதோவொன்றையோ அந்த நபரிடம் கூறும், செய்யும்படி நீங்கள் அவர்களிடம் கூறுவதை ஒவ்வொரு நபரும் அப்படியே சரியாகச் செய்வார்கள். அவர்கள் திருகி வளைந்த உறுப்புகளைக் கொண்டவர்களாய் படுத்து, கட்டப்பட்டிருப்பார்களானால், அவர்கள் அப்படியும் இப்படியும் வேகமாக அசைந்து, அந்தக் கட்டிலை விட்டுப் போவதற்கு தங்களால் முடிந்த சிறந்த விதத்தில் முயற்சித்துக் கொண்டு இருப்பார்கள் அல்லது செய்து கொண்டிருப்பார்கள்... அவர்கள் எழும்பும்படியாக, அதைச் செய்ய முடியும் வரையில், அவர்கள் தொடர்ந்து அதைச் செய்து கொண்டேயிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு எந்தத் தோல்வியுமே இருக்காது" என்று கூறினதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். 16. ஆனால் அமெரிக்காவில், அது ஒருக்காலும் சரியாக கிரியை செய்யவில்லை. அங்கே அப்படியே.... அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு சொந்தமான கருத்துகள் இருக்கும் அளவுக்கு, அதிக போதகங்களும், அநேக வித்தியாசமான போதனைகளும் இருக்கின்றன. அவர்கள், "இப்பொழுது, அந்த மனிதன் ஒரு ஆவியுலக இடையீட்டாளர் என்று என்னுடைய மேய்ப்பர் கூறினார்" என்று சொல்லுவார். நல்லது, அது உங்களுக்கு அதைத் தீர்த்துவைத்து விடுகிறது. ஓ, நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, இப்பொழுது நான் அதை நம்பமாட்டேன்” என்று கூறலாம். ஆனால் கீழே, அந்த ஆழ்மனதிலோ, அது இன்னுமாக அங்கேயே இருக்கிறது. நீங்கள் வழக்கமாக உங்கள் ஆழ்மனதைக் கொண்டே இயங்குகிறீர்கள். 17. வெளியே சமுத்திரத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பலைப் போன்று, அந்தக் கப்பலின் உள்ளே, கீழே போகிற ஒரு சிறு மனிதனுக்கு கப்பல் தலைவன் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான், ஓ, அவன் எதையும் காண்பது கிடையாது. அவன் அப்படியே மேலிருந்து வரும் கட்டளைகளின்படி கப்பலை இயக்குகிறான். அவனுக்குத் தெரியாது. அவன், "இந்த வழியில் கப்பலை செலுத்து," என்றோ, அல்லது, "இந்த வழியில் திருப்பு” என்றோ, அல்லது, "முழு வேகத்தோடு முன்னால் போ” என்றோ, அல்லது, "பின்னோக்கிப் போ” என்றோ கூறுகிறான். இங்கே மேலேயிருக்கும் மனிதன் கட்டளை கொடுப்பதின்படியே அவர் கிரியை செய்கிறான். 18. நல்லது வழக்கமாக, அந்த-அந்தவிதமாகத்தான் உங்கள் ஆழ்மனம் கிரியை செய்கிறது. நீங்கள் இங்கே மேலே இருந்து, நீங்கள் இதைச் சிந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, அது உங்களை குழப்புகிறது கலக்குகிறது, ஆனால் இங்கே கீழேயோ, வேறு ஏதோவொன்று உங்களை அசைக்கிறது. இப்பொழுது, எனக்கு அது தெரியும். நான் ஆயிரக்கணக்கான நோயாளிகளை மேடையின் மேலேயே பிடித்திருக்கிறேன், அங்கே அவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஆமாம், சகோதரன் பிரன்ஹாமே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுவார்கள். இருப்பினும், அங்கே கீழே என்ன இருக்கிறது? நான், "தேவனே, இங்கே மேலே அவர்கள் விசுவாசிப்பது போன்றே அவர்கள் இங்கே கீழேயும் அதை விசுவாசித்திருந்தால், அது வித்தியாசமானதாக இருந்திருக்குமே” என்று எண்ணுவேன். 19. ஆனால் அவர்கள் இங்கே மேலே அதை விசுவாசிக்கிறார்கள், ஆனால் இங்கே கீழேயோ அதை விசுவாசிப்பதில்லை. எனவே, அது -அது கிரியை செய்யாது. இது, இங்கேயுள்ளது அதை ஒதுக்கித்தள்ளிவிடும், ஏனென்றால் ஆழ்மனமானது தொடர்ந்து அசைந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் மனதிலுள்ள எண்ணத்தைக் கொண்டு நடக்க முயற்சித்து, "தேவனுக்கு மகிமை, நான் சுகமடைந்து விட்டேன். கர்த்தருக்கு துதி உண்டாவதாக, நான் சுகமடைந்து விட்டேன்" என்று கூறிக் கொண்டிருப்பீர்கள். சரியாக இங்கே கீழேயோ, அது அவ்வண்ணமாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. எனவே, இறுதியாக, இது அப்படியே அதை உடனடியாக ஆளுகை செய்து விடுகிறது. அறிகுறிகள் எழும்பும் போது, "நல்லது, நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை" என்று நீங்கள் கூறுகிறீர்கள். புரிகிறதா? 20. அங்கே தான் அது இருக்கிறது. இது இதனோடு இருந்தாக வேண்டியிருக்கிறது. இதுவும் இதுவும் அதனோடு இருந்தாக வேண்டும். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? அப்போது சுகமளித்தல் நடக்கிறது. அப்போது நீங்களும், உங்கள் ஆத்துமாவும், உங்களுடைய சிந்தையும், மற்றும் எல்லாமே தேவனோடு ஒத்துழைப்போடு இருந்து, தேவனுடைய ஆசீர்வாதத்தின் வாய்க்கால் அப்படியே சரியாக உங்களுக்குள்ளே பாய்ந்து, உங்களைச் சுகப்படுத்துகிறது. அது அப்படியே அவ்விதமே இருந்தாக வேண்டும். 21. இப்பொழுது, நான் அதைக் கவனித்திருக்கிறேன். நான் எதைச் செய்து கொண்டிருக்கிறேனோ அதன் பேரில் மிகவும் நுணுக்க விவரமாக இருந்து வருகிறேன், நான் எப்போதுமே காத்திருக்கிறேன். அநேகமாக, ஒருக்கால் தேவன் அந்த சாபத்தை.... மேல் வைத்திருப்பார்..... அதை அவன் மேல் வைக்கும்படி சாத்தானை அனுமதித்திருப்பார். தேவன் எவர் மேலும் ஒரு சாபத்தையும் வைப்பதில்லை, ஆனால் சில சமயங்களில், சாத்தான் அதைச் செய்ய அவர் அனுமதிப்பார், அவர் அதை யோபின் மேலும், அவர்களில் அநேகர் மேலும் செய்தான் என்று உங்களுக்குத் தெரியும்; சாத்தான் ஒரு சாபத்தை வைக்கிறான், தேவன் சாபத்தை வைக்க மாட்டார். தேவன் அன்பாக இருக்கிறார். ஆனால் நீங்கள் தவறான ஏதோவொன்றைச் செய்தால், கொஞ்சம் கசையடித் தண்டனையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர் சாத்தானை கட்டவிழ்த்து விடுகிறார். 22. அதன்பிறகு இந்த சாபமானது உங்கள் மேல் இருக்கும் போது, அநேகமாக ஒருக்கால், வழக்கறிஞரின் வல்லமையின் மூலமாக இருந்தால் என்னவாகும், இந்தக் காரியம் சரி செய்யப்படும் வரையில் அது அங்கேயே இருக்கும்படி தேவன் சித்தமுள்ளவராயிருக்கையில், நீங்கள் திரும்பிச் சென்று, அந்த சாபத்தை எடுத்துப் போட்டால், என்னவாகும்? அப்படியானால் அதைக் குறித்து என்ன? அப்போது நீங்கள் தேவனோடு தொல்லையில் சிக்கிக் கொள்கிறீர்கள். அது சரிதானா? நீங்கள் தேவனோடு தொல்லைக்குள்ளாகிறீர்கள். 23. அங்கே டர்பனில், மேடையின் மேல் வந்த ஒரு பெண்மணியைப் போன்று, அவள் மேலே நடந்து வந்தாள், அவள் மகத்தான பெரிய, பலம் வாய்ந்த, ஆரோக்கியமாக தோற்றமளித்த பெண்ணாக இருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளிடம் பேசி, அவள் யார் என்றும், அவள் எங்கிருந்து வருகிறாள் என்றும், அவளுடைய பெயர் என்னவென்றுறும், அவளுடைய கணவன் யார் என்றும், அவளுடைய கருப்பையில் ஒரு நீர்க்கட்டி இருந்தது என்றும் அவளிடம் கூறினார். அதற்கு அவள், அது முற்றிலும் சரியே” என்றாள். 24. நான், 'மரணத்திற்காக ஆயுத்தப்படும், நீ ஒரு சில நிமிடங்களே அன்றி, (அதிகமாக) வாழப்போவதில்லை” என்றேன். பதினைந்து, இருபது நிமிடங்களில், அவள் ஒரு பிணமாகி விட்டாள். அவர்கள் அவளை அங்கிருந்து வெளியே சுமந்து சென்றார்கள். பாருங்கள்? 25. ஒரு நபரைச் சுற்றிலும் மரணம் இருப்பதை நான் காணும்போது, நான் அதை ஒருபோதும் பேசுவதில்லை, நான் வெறுமனே அவர்களுக்காக ஜெபித்துவிட்டு, தொடர்ந்து போய் விடுகிறேன், ஏனென்றால் எனக்குத் தெரியாது. ஆனால் இம்முறையோ இறுதி ஊர்வலத்தில், அவளை வெளியே கொண்டு செல்வதை நான் கண்டேன், தேவன் ஏற்கனவே அவ்வண்ணமாக அதைக் கூறிவிட்டார். எனவே அது அதைத் தீர்த்து வைக்கிறது, நீங்கள் பாருங்கள். அவள் மரிக்கப் போகிறாள் என்பது எனக்குத் தெரிந்தது. எனவே அவள் மரித்தாள், அப்படியே, என்றாலும், அவள் மரித்தவளாக தரையில் இருந்தாள். அவள் அப்படியே அங்கிருந்து நடந்து சென்று, ஒரு சில நிமிடங்கள் அங்கே அமர்ந்திருந்தாள், அதன் பிறகு மரித்தவளாக உருண்டு விழுந்தாள். அப்படியே சுகதேகியாக, ஆரோக்கியமாக, பெண் உறுப்பில் சிறிய நீர்க்கட்டியை உடையவள், அவளிடம் தவறாக இருந்தது எல்லாமே அவ்வளவு தான். ஆனால் அவள் மரித்துப் போனாள், அது முன்னரே பார்க்கப்பட்டிருந்தது. இப்பொழுது, நான் சுகமளிப்பவனாக இருந்திருந்தால், நான் அவளைச் சுகப்படுத்தியிருந்திருப்பேன். என்னால் அவளைச் சுகப்படுத்த முடியாது, சுகமளிக்கும் ஒருவர் தேவனே. செய்யும்படி அவர் கூறுவதற்கு நீங்கள் கீழ்ப்படிந்தாக வேண்டும். 26. அப்படியானால், அதைக் குறித்த எல்லாவற்றிலும், அதுதான் காரணமாகும். மோசே, தான் அந்தக் கன்மலையைப் பார்த்து பேசும்படிக்கு எதிர்பார்க்கப்பட்ட போது, அந்தக் கன்மலையை அடித்த மோசேயை நினைவிருக்கிறதா? எத்தனை பேருக்கு அந்தக்கதை நினைவிருக்கிறது? ஊழியக்காரர்களாகிய நீங்களும் அதைச் செய்கிறீர்கள். அப்போது அவன் நிச்சயமாகவே தொல்லைக்குட்பட்டான், இல்லையா? அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போய்ச் சேரவில்லை. தேவன் அப்படியே அவனை அதைவிட்டு வெளியே எடுத்து, "இல்லை, மோசே, ஒருபக்கமாக தள்ளி வந்துவிடு” என்றார். அவன் மேலே அந்த மலைப்பகுதியில் தவழ்ந்து (ஊர்ந்து) சென்று அங்கேயே அவன் மரித்துப் போனான், தூதர்கள் அவனை எடுத்துச்சென்று அடக்கம் பண்ணினார்கள். அவ்விதமான வேறு அநேக கதைகள் வேதாகமத்தில் இருக்கின்றன. எனவே, நான் மிகவும் கவனமாக முயற்சித்து வருகிறேன். 27. ஆனால் நான் எப்போதுமே ஒரு காரியத்தைக் குறித்து நினைப்பதுண்டு. தேவன், கல்வாரியில் மரணத்தின் வல்லமையின் மூலமாக, அசுத்த ஆவிகளைத் துரத்தும் படியான வல்லமையை சபைக்குக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், "என் நாமத்தினாலே.... துரத்துவார்கள்” என்று மாற்கு 16 கூறுகிறது. நான் துரத்துவேன்” என்றல்ல; அவர்கள் துரத்துவார்கள். என் நாமத்தினாலே, பிசாசுகளைத் துரத்துவார்கள்." அது சரிதானா? அவர்கள் வியாதிஸ்தர் மேல் தங்கள் கரங்களை வைத்தால், அவர்கள் சொஸ்தமாவார்கள்." 28. இப்பொழுது, வியாதியஸ்தர் மேல் கரங்களை வைப்பது ஒரு காரியமாக இருந்து வருகிறது, நான் அடிக்கடி வியப்படைவதுண்டு, நான் கூறினபடி: வியாதிப்பட்டவர்கள் மேல் கைகளை வைப்பதை அறியாத ஒரு தாயும் இங்கே உள்ளே இருக்க மாட்டார்கள். உங்களுடைய சிறு குழந்தை வியாதிப்பட்டிருந்து, நீங்கள் அதை அன்பாகத் தட்டிக்கொடுத்து, சற்று அதனோடு விளையாடிப் பாருங்கள், அப்போது அது அதை எவ்வாறு அமைதிப்படுத்திவிடுகிறது. 29. பதட்டமாகவோ, நிலைகுலைந்து போனதாகவோ, அல்லது ஏதோவொன்றாக இருக்கும் ஒரு குதிரையையோ, அல்லது உங்கள் நாயையோ நீங்கள் எப்பொழுதாவது கொண்டிருந்திருக்கிறீர்களா? அப்படியே (சகோதரன் பிரன்ஹாம் அதை விளக்கிக் கூறும்படியாக அன்பாகத் தட்டிக்கொடுக்கிறார் - ஆசிரியர்.) அதை சற்றே தட்டிக்கொடுத்து, உங்கள் கையை அதன் மேல் வைத்து, அதை தடவிக்கொடுத்துப் பாருங்கள்? நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? இப்பொழுது, வியாதியஸ்தர் மேல் கரங்களை வைப்பதன் மூலமாக அங்கே தேவனுடைய வல்லமை இருக்கிறது, ஏனென்றால் அவ்வாறு செய்யும்படிக்கு, அது அது இயேசு கிறிஸ்துவின் ஒரு கட்டளையாக இருக்கிறது. 30. சென்ற செவ்வாய்க் கிழமை, அல்லது, சென்ற இரவுக்கு முந்தின இரவிலோ, மூன்று இரவுகளுக்கு முன்பு, அது இருந்தது என்று நினைக்கிறேன், அது நான் சகோதரன் விப்பர்ட் அவர்களுடைய சபையில் இருந்த போது, நாங்கள் சகோதரன் விப்பர்ட் அவர்களுடைய சபையில் இருக்க வேண்டியிருக்கும் அந்த இரவு இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருந்தேன், அது செவ்வாய்க்கிழமை இரவு என்று நினைக்கிறேன். சகோதரன் விப்பர்டும் நானும் நெருங்கிய உறவினர்கள், நான் தவறாக இருந்தால், தேவன் என்னை மன்னிக்க வேண்டுமென்று நான் விரும்புவதாக நினைத்தேன், சகோதரன் விப்பர்ட்ட அவர்களும் கூட அவ்விதமே எண்ணுவார் என்று நிச்சயமுடையவனாக இருந்தேன். ஆனால் ஒரு முறை ஒரு பலப்பரீட்சையை (showdown) நான் காண விரும்பினேன், அது பரிபூரணமாக சாத்தானுக்கு எதிரான பலப்பரீட்சை, நான் தரிசனம் இல்லாமலே கொஞ்சம் அனுபவங்களைக் கொண்டவனாயிருந்தேன். 31. ஓரிகானிலுள்ள போர்ட்லாண்டில், அந்த வெறிபிடித்தவன் மேடையின் மேல் ஓடிவந்த போது, அவன் என்னுடைய அளவைப்போன்று மூன்று மடங்கு பெரிதாக இருந்தான். எனக்கு 128 பவுண்டு எடை இருந்தது. அவனுக்கோ ஏறக்குறைய 260 பவுண்டுகள் எடையிருந்தது, எழு அடி உயரம், மகத்தான மிகப்பெரிய மனிதன். அவன் இவ்விதமாக தன்னுடைய கைகளை இங்குமங்கும் அசைத்தவனாக மேடையின் குறுக்காக வந்து, என்னை சபித்துக்கொண்டும், என்னுடைய முகத்தில் எச்சில் ஊமிழ்ந்து கொண்டும் இருந்தவாறு, "நீ உன்னை நீயே ஒரு தேவ மனிதனாக சொல்லி ஏமாற்றுகிறாய். நான் உன்னுடைய அந்தச் சிறு பலவீனமான சரீரத்தை உடைத்துப் போடுகிறேன்” என்றான். நல்லது, மனுஷீகமாகப் பேசுவோமானால், அவனால் முற்றிலுமாக அதைச் செய்ய முடிந்திருக்கும். 32. நான் சற்று முன்பு தான், இரண்டு சிறிய காவலர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தியிருந்தேன். அவர்கள் அவனைப் பிடிப்பதற்காக ஓடினார்கள். இது மாம்சத்தோடும் இரத்தத்தோடுமான விவாகம் அல்ல" என்று நான் கூறினேன். எனக்குள்ளிருக்கிற ஏதோவொன்று எழும்புவது மட்டுமாக, அதற்கு மேலும் நான் எதையும் கூறவில்லை. சரியாக அப்போதே அவன் அடித்து வீழ்த்தப்பட்டு விட்டான் என்பதை நான் அறிந்திருந்தேன், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாகக் கூறியிருந்தார். 33. அவன் மேடைக்குக் குறுக்காக வந்து, நின்று விட்டான், என்னிடமிருந்து ஏறக்குறைய ஐந்து அடி தூரத்தில் அவன் நின்றான். அவன் அப்படியே... (சகோதரன் பிரன்ஹாம் எச்சில் உமிழும் சத்தத்தை உண்டாக்குகிறார் – ஆசிரியர்).... துப்பினான், அது அப்படியே என்னுடைய முகமெல்லாம் பறந்தது. அவன், "நீ புல்லில் இருக்கும் பாம்பு. நீ வெளி வேஷக்காரன். இங்கே நில்...” என்று சொன்னான். தெருவில் மேலும் கீழுமாக இருந்தவர்களை அல்லாமல், 6500 பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவன், நான் உன்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு எலும்பையும் உடைத்துப்போடுவேன்” என்று கூறி, அவன் தன்னுடைய பெரிய கைமுட்டியை, தன்னுடைய மகத்தான மிகப்பெரிய கையை அசைத்தான். அவனுடைய கண்களை உருட்டி, அவனுடைய பற்களை கடித்தான் (set together), அவர் அவர்..... 34. அவன் முந்தின நாள் தான் ஒரு ஊழியக்காரரின் தாடை எலும்பையும் ஒரு தோள்பட்டையையும் உடைத்துப் போட்டிருந்தான் என்று இந்தக் காவலர்கள் கண்டுபிடித்தார்கள், அவனைப் பிடிக்கும்படி, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடிக் கொண்டிருந்தார்கள், அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், உடனடியாக அவனைப் பிடிக்கும்படி பிடியாணையை அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் பைத்தியம் பிடித்தவர்களுக்கான மருத்துவமனையிலிருந்து வந்திருந்தான். அவனுக்கு பிரசங்கிகளைப் பிடிக்காது. அவன் அப்படியே அவர்களைத் தாக்கியும், எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான். எனவே, அவன் நினைத்தான், அப்போது, அவனால் செய்ய முடிந்திருக்கும், அவன் அங்கே மேலே ஓடி வந்த போது..... பரிசுத்த ஆவியானவர் எப்படியாக வழிநடத்துகிறார், நல்லது, அந்த கண ரேநத்தில் முதலில் ஒரு தரிசனம் இல்லலாமலே ஏதோவொன்று, "பயப்பாதே” என்று கூறுவதை அறிந்திருந்தேன். 35. நான், அவன் என்னை நோக்கி வந்தபோது, நான் அந்த தூதனானவர், "நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினதைக் குறித்து நினைத்துப் பார்த்தேன். நான், 'நீர் இருப்பீர் என்று சொன்ன நீர் இங்கேயிருந்தால், அவன் என்னவாக இருக்கிறான்? விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் ஜீவனுடைய தேவனுக்கு அறைகூவல் விடுக்க அவன் எம்மாத்திரம்?” என்று நினைத்தேன். இந்நிலையில், அவன் மேலே என்னை நோக்கி வந்து கொண்டிருந்து, "நான் உன் சரீரத்திலுள்ள ஒவ்வொரு எலும்பையும் முறித்துப் போடுவேன்" என்றான். அவன் தன்னுடைய கைமுட்டியை ஓங்கினான். 36. நான், "நீ தேவனுடைய ஆவிக்கு சவால் விட்டபடியினால், இன்றிரவு என்னுடைய காலடியில் விழுவாய்” என்றேன். நான் அதைக் கூறினேனா என்பதும் எனக்குத் தெரியவில்லை, பாருங்கள், அது ஆவியானவர் பேசுவதாக இருந்தது, அப்போதே, அது ஜெயம் பெற்றுவிட்டது. 37. இவ்வாறாக, அங்கே இரு சவால்களும் இருந்தன. அவன் என்னை நோக்கி ஓடிவந்து, "நான் யாருடைய கால்களில் விழுவேன் என்று உனக்குக் காட்டுவேன்” என்று கூறி, அவனுடைய மகத்தான பெரிய கைமுட்டியை ஓங்கினான், பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் இருந்தார்கள். அவன் தன்னுடைய முஷ்டியை ஓங்குகையில், சாத்தானே, இவனைவிட்டு வெளியே வா” என்று கூறினேன். 38. உடனே அவன் தன்னுடைய கைகளை பின்னால் எடுத்துவிட்டான், அவனுடைய கண்கள் அவ்விதமாக வெளியே தள்ளியது, அவன் அங்குமிங்கும் சுழன்றபடி இருந்தான். அவன் தன்னுடைய தலையை பின்னால் போட்டு, தரையில் வேகமாக எதிர்திசையில் திரும்பி, என்னுடைய கால்களில் விழுந்தான், எனவே காவலர்கள் அவனை என்னுடைய கால்களை விட்டு உருட்ட வேண்டியிருந்தது, ஏனென்றால் என்னால் அசைய முடியாதிருந்தது. சரியாக மேடையின் குறுக்காக, அவன் சரியாக அப்படியே அங்கே கிடந்தான். காவலர், அந்த மனிதன் இறந்துவிட்டானா?” என்று கேட்டார். அதற்கு நான், "இல்லை, ஐயா” என்றேன். "அவன் சுகமடைந்து விட்டானா?” என்று கேட்டார். 39. நான், "இல்லை, ஐயா, அவன் அந்த ஆவியைத்தான் தொழுது கொள்ளுகிறான். பாருங்கள்? அவர் சரியாக அவனிடமே அதைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டார், ஏனென்றால் அவன் சரியாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். அவன் சுகமடையவில்லை” என்றேன். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். நான், அவனை என்னுடைய கால்களை விட்டு வெளியே எடுங்கள்” என்றேன். அந்தப் பெரிய மனிதன் மேலே என்னுடைய கால்களின் மேல், என்னைப் பிடித்திருந்தான், அவன் படுத்துக்கிடந்தான்; என்னால் என்னுடைய கால்களை வெளியில் எடுக்க முடியாதிருந்தது, இரண்டும் ஒன்றாயிருந்தது. எனவே எனன்னால் - என்னால் என்னுடைய கால்களை வெளியே அசைக்கவே முடியாதிருந்தது, அவர்கள் அவனை இழுத்துச் சென்றபோது, நான் என்னுடைய கால்களை வெளியே எடுத்தேன், ... கொண்டு செல்லும்படி போனார்கள். 40. அந்நேரத்தில், தங்கள் தலைவன் தோற்கடிக்கப்பட்டதை அந்தப் பிசாசுகள் எல்லாம் கண்டிருந்தன. அவர்கள் சக்கர நாற்காலிகளை விட்டும், கட்டில்களை விட்டும், தூக்குப் படுக்கைகளை விட்டும், மற்ற எல்லாவற்றை விட்டும், எழுந்து நடக்கத் தொடங்கினார்கள். அதுவே அந்தக் கூட்டத்தின் முடிவாக இருந்தது. அவர்கள் அப்படியே, எல்லாருமே சுகமடைந்து நடக்கத் தொடங்கி விட்டார்கள். அதுவே அதன் முடிவாக இருந்தது, எல்லாமே. பாருங்கள்? அப்படியே..... 41. இப்பொழுது, பாருங்கள்? சாத்தான் அங்கே தோற்கடிக்கப்பட்ட போது, முழு கூட்டத்தினரும் ஒரே இசைவோடு விசுவாசித்து, நடந்து சென்றார்கள். இப்பொழுது, சாத்தான் ஒரு காரியத்தில் தோற்கடிக்கப்பட்டிருப்பான் என்றால், ஏன் அவர்கள் அதே காரியத்தைச் செய்ய முடியாது? புரிகிறதா? எனவே, வேறொரு இரவில், நான் என்னுடைய மகனிடம் சொன்னேன், நான், "இப்பொழுது, நீ எவ்வளவு ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறாய்?” என்று கேட்டேன். 42. அந்த நாள் முழுவதும், நான் ஜெபத்திலேயே தரித்திருந்தேன், நான் ஜெபத்தின் கீழாகவே ஜீவித்தேன். நான் - நான் அப்படியே அறைக்குள் இருந்தேன், நான் பில்லியையோ, அவர்களையோ என்னைச் சுற்றிலும் அனுமதிக்கவில்லை, நான் கதவைச் அடைத்திருந்தேன். நான் தொடர்ந்து, "தேவனுடைய தூதனானவர் என்னிடம் இறங்கி வந்து, என்னிடம் கூறினாரே; நான் ஒரு சிறு குழந்தையாக இருந்தபோதே, எனக்கு அப்போது மூன்று நிமிட நேரங்களுக்கு மேல் வயதாகவில்லை; நான் ஒரு குழந்தையாக இருந்த போது, அவர் தொங்கிக் கொண்டிருந்த போது; என்னுடைய ஜீவியம் முழுவதும் அவர் என்னிடம் பேசியிருக்கிறார்; அவர் ஒரு புகைப்படத்தில் தமது படத்தை எடுக்கவும் கூட கொண்டிருந்தாரே” என்று கூறினேன். நான் இக்காரியங்களைத் திரும்ப மேற்கோள் காட்டத் தொடங்கினேன். நான், அந்த இரவில், அவர் என்னிடம் நடந்து வந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்தேனே" என்றேன். ஒரு தரிசனம் அல்ல, ஒரு மனிதர், நான் அங்கே நின்றுகொண்டு, நீங்கள் பேசுவது போன்றே அவரிடம் பேசினேன். கற்பனை அல்ல, அந்த மனிதர், அவர் தரையில் நடந்து வருவதை நான் கேட்டேன், நானோ, அல்லது யாரும் எவ்வளவு உண்மையாக நடந்து வருவார்களோ, அவ்வளவு உண்மையாக அவர் மேலே நடந்து வந்தார். 43. அவர் நின்றுகொண்டு, என்னிடம் பேசினார். அவர், "நீ வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கும்படியாகவே, இந்த உலகத்தில் பிறந்து, அனுப்பப்பட்டாய். நீ உத்தமமாக இருந்து, ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்வாயானால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பாக, எதுவுமே நிற்காது” என்று கூறினார். அதற்கு நான், "நல்லது, அவர்கள் என்னை நம்பமாட்டார்கள், ஐயா. நான் ஏழையான மனிதன், ஏழையாயிருக்கும் என்னுடைய ஜனங்கள் மத்தியில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறேன், நான் கல்வியறிவற்றவன்” என்று கூறினேன். அப்போது அவர் சம்பவித்த இக்காரியங்களைக் குறித்து என்னிடம் கூறத் தொடங்கினார். அதன் பிறகு அவர், 'நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினார். 44. நான், அங்கே அவர் இருந்தாரே” என்று நினைத்தேன். விவாதம் நடந்த அந்த இரவில், அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்ட போது, அந்தப் பெரிய விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், இங்கேயிருக்கும் இந்தப் பாடகர் குழுவினர் தான் பாடி இருப்பார்கள். பாருங்கள்? அவர்கள் எல்லாருமே அங்கே நின்று கொண்டிருந்தார்கள், அந்த பாப்டிஸ்டு பிரசங்கி உலகத்திலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் என்னை அழைத்துக் கொண்டு இருந்தார். நான் மேலே பால்கனியில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன், நான் எங்கே இருந்தேன் என்று அவருக்குத் தெரியாதிருந்தது. சகோதரன் பாஸ்வர்த் அவர்களை கேலி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார், சகோதரன் பாஸ்வர்த் அவர்களுடைய முகம் மற்றும் காரியத்தில் தம்முடைய விரலை அசைத்தவாறு அவருடைய படத்தை எடுத்தார். சகோதரன் பாஸ்வர்த் அவர்கள், சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் கூட்டத்தினரை அனுப்பிவைக்க விரும்பினால், அவர் இங்கேயிருக்கிறார் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார். 45. நான் கீழே இறங்கி வந்த போது, நான், "நல்லது, நான் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல. வியாதிப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்கும்படியாக என்னிடம் கூறின, ஒரு தேவனுடைய தூதனானவரைக் குறித்து மாத்திரமே நான் பேசுகிறேன். நான் சத்தியத்தைக் குறித்து சாட்சிகொடுத்தேன், தேவன் என்னைக் குறித்து சாட்சிகொடுப்பார். தேவன் என்னைக் குறித்து சாட்சி கொடுக்காவிட்டால், நான் தவறாகவே இருக்கிறேன், அப்படியானால் நான் என்னைக் குறித்து மாத்திரமே சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறவனாக இருக்கிறேன். நான் அவரைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன், அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார்” என்று கூறினேன். 46. ஏறக்குறைய அந்நேரத்தில், ஏதோவொன்று, "வியூ!” என்று போனது. இதோ அவர் வருகிறார், உ-உம், சரியாகக் கீழே. அவர் சாட்சிகொடுத்துக் கொண்டிருந்தார், ஏறக்குறைய 30,000 பேர் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதைக் குறித்த புகைப்படத்தை எடுத்தார்கள், அதோ அது இருந்தது. இப்பொழுது, விஞ்ஞான உலகமானது அந்த மண்டலத்திற்குள் போகத் தொடங்குகிறது, அவர்கள், "அது உண்மை, அந்த வல்லமை...” என்று கூறத் தொடங்கினார்கள். 47. நான், "நல்லது, தேவனே, இதைச் செய்யும்படியாக நீர் நீர்-நீர் தான் என்னிடம் சொன்னீர். ஏன் என்னால் முடியவில்லை, நான் அமெரிக்காவில் இருக்கையில், அவர்களால் இந்த அடையாளங்களை நம்ப முடியாவிட்டால், ஏன் அவர்களுக்காக வேறு ஏதோவொன்றை நான் செய்யும்படி அனுமதிக்க உம்மால் முடியாதிருக்கிறது? தேவனே, இன்றிரவு எனக்கு உதவி செய்து, சரி என நிரூபிக்கும்படியாக நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன், நான் மேடைக்கு வருவதற்கு முன்பாகவே, நான், 'எனக்கு உதவி செய்யும்' என்று கூறுவதை நீர் கேட்டீரே” என்று சொன்னேன். 48. அந்த இரவில் மேடையின் மேல், நாங்கள் ஒரு சிலரை மேலே அழைத்தோம்; அங்கே உள்ளே, ஜனங்களால் காணக் கூடிய கண்ணுக்குத் தெரியும் விதத்தில் எதையும் நாம் பெற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் வேறொரு குழுவினரை மேலே அழைத்தோம், அந்தக் குழுவோடு கூட, முதலாவது காரியமாக, ஒரு பையன் இருந்தான்; அவனுடைய கண்களானது ஒரு கொடூரமாக வெடித்த பொம்மைத் துப்பாக்கியால் (dynamite cap) சுடப்பட்டிருந்தது (shot out). ஒரு கண் மொத்தமாக போய்விட்டிருந்தது, அது வெட்டி வெளியே எடுக்கப்பட்டிருந்தது. மற்ற கண்ணானது சரியாக நடுமையத்தில் தாக்கப்பட்டிருந்தது, முழு பார்வையும் அதை விட்டு போய் இருந்தது; அவன் முற்றிலும் குருடாயிருந்தான். 49. இவ்வாறாக, அவன் மேலே நடந்து வந்தான், நான் எவருக்காகவும் எவ்வாறு ஜெபிப்பது என்று எனக்குத் தெரிந்த அளவுக்கு அவ்வளவு உத்தமமாக அந்தப் பையனுக்கு ஜெபித்தேன். அங்கே அவனுடைய.... நான், 'மகனே, உன்னால் பார்க்க முடிகிறதா?” என்று கேட்டேன். அப்போது அவனுடைய கண்களில், இவ்விதமாக, ஒரு பெரிய, பிரகாசமான வெளிச்சம் கீழே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த வெளிச்சத்தைக் காணும்படியாக, இந்தவிதமாக கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான், நான் அவனுடைய தலையைப் பின்புறம் திருப்பி, நான், "இதுதான் அந்த வெளிச்சம்” என்றேன். அவன் அந்தவிதமாக அதை கூர்ந்து நோக்கி, "ஐயா, நான் வருந்துகிறேன், என்னால் ஒரு காரியத்தையும் காண முடியவில்லை ” என்று கூறினான். 50. நல்லது, நான் பலப்பரீட்சைகளிலும் மற்றும் இடங்களிலும் அதை நினைவுகூருகிறேன். நான் பின்னால் திரும்பி, "தேவனே, இப்பொழுது, நான்.... ஒரு வாய்ப்பு இருக்கிறது, என்னுடைய ஜீவியத்தில் ஏதாகிலும் இருக்குமானால், நீர் அதை எடுத்துப் போடும். அங்கே இருக்குமானால், அதைக் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நீர் இங்கே நின்று கொண்டு இருக்கிறீர் என்றும், இந்தக் காரியத்தை நீர் வாக்குப் பண்ணியிருக்கிறீர் என்றும், இது உமது வார்த்தையாக இருக்கிறது என்றும் நான் அறிவேன்” என்று நினைத்தேன். என்னுடைய இருதயத்தில், ஏதோவொன்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ள ஆழமாகத் தோண்டத் தொடங்கினேன். விசுவாசம்! 51. நான் மறுபடியும் திரும்பி, என்னுடைய கரத்தை அந்தப் பையனின் கண்ணின் மேல் வைத்து, இந்தப் பொல்லாங்கை நடப்பித்துள்ள சாத்தானே, முழு பார்வையும் அடிக்கப்பட்டு இருக்கிறது, ஒவ்வொரு நரம்பும் செத்துப்போய்விட்டது, இவன் முற்றிலும் குருடாயிருக்கிறான், இவனால் இருளிலிருந்து பகல் வெளிச்சத்தைக் கூற முடியவில்லை என்றேன். அங்கே அவன் இருந்தான், நான், “நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுதல் செய்து, அந்தப் பார்வை அந்தப் பையனின் கண்களில் வரும்படி கட்டளையிடுகிறேன்” என்றேன். நான் என்னுடைய கரத்தைப் பிடிக்கும்படி விட்டேன். அவன் கூச்சலிட்டு, என்னுடைய கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, மேடையை விட்டு வெளியே ஓடி, தன்னுடைய கரங்களைப் பார்த்துக்கொண்டே தேவனைத் துதித்துக் கொண்டிருந்தான். 52. அது என்னவாக இருந்தது? தங்களுடைய கண்கள் குருடாயிருந்த இரண்டு பெண்கள், மேடைக்கு வந்தார்கள், அவர்கள் இருவருமே தங்கள் பார்வையைப் பெற்றுக் கொண்டார்கள். இதோ ஒரு செவிடன் வருகிறான், அவன் மேடைக்கு வந்தான், அவனுடைய காதுகள் கேட்கும் திறனைப் பெற்றன. அவனால் ஒரு குசுகுசு மெல்லப்பேசுவதையும் கேட்க முடிகிறது. அது என்னவாக இருந்தது? அது எனக்கு ஆறுதலைக் கொடுக்கிறது. 53. தேவனுக்குச் சித்தமானால், நான் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போகும் போது, நான் நேற்றைய தினம் திரும்பிப் போனதைக் குறித்த காரணமெல்லாம் அதுதான். நான் அவ்வாறு செய்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் போக வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு அது அப்படியே என்னை மூச்சு திணற அடிக்கும்படி செய்ய தொடங்குகிறது dow-... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 54. ...?.... நான் பிறப்பதற்கும் முன்பே -நான்- முன்பே - அதற்கு முன்பாகவே, சுவிசேஷத்தைச் சுமந்து சென்ற அவருடைய பரிதாபமான வயதான கால்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் அங்கே முழங்கால்படியிட்டு, அவ்விதமாக வீங்கும்படி செய்திருந்த அந்தப் பிசாசை அவருடைய காலை விட்டு கடிந்து கொண்டோம். அது இப்பொழுது போய்விட்டது, அவர் எப்போதும் நடப்பது போலவே நடக்கிறார். 55. பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி, உன்னால் கூடிய மட்டும் வேகமாக வனாந்தரத்திற்கு போ” என்றார். நான் என்னுடைய கோட்டையும் தொப்பியையும் பிடித்தபடி, நான், "சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, நீர் பிரசங்க பீடத்தை எடுத்துக் கொள்ளும். நான் போகிறேன்” என்றேன். நான் வெளியே போய், நான் தேவனோடு தொடர்பு கொள்வது மட்டுமாக, அங்கேயே தரித்திருந்தேன். என்னுடைய சத்தம் இயல்பாக திரும்பி வருகிறது. இந்த, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இக்காரியமானது ஒரு சின்னஞ்சிறிய காரியம் தான் என்று அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நாங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் மட்டுமாக காத்திருங்கள். 56. இப்பொழுது, என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். சகோதரனே, சபையானது எழும்பிக் கொண்டிருக்கிறது, தேவனுடைய வல்லமை, நீரோட்டமானது உயரமாக இருக்கிறது, தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறது; நாம் ஆழ ஆழங்களுக்குள்ளிருந்து அதிக உயரங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் சீஷர்கள் மேல் வாசம் பண்ணின தேவனுடைய பழமை நாகரீகமான, அப்போஸ்தல, பெந்தெகோஸ்தே வல்லமையானது, மீண்டுமாக சீஷர்களிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் சரியே. நீங்கள் ஒருக்காலும் கேள்விப்பட்டிராத அந்தக் காரியங்கள் சரியாக இப்பொழுதே செய்து கொண்டிருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன். அவருடைய வல்லமை இங்கே இருப்பதை அறியும் போது, இன்றிரவு, நான் அப்படியே ஒரு புது நபரைப் போன்று உணருகிறேன். 57. நடத்தும்படியாக எனக்கு இன்னும் இரண்டு கூட்டங்கள் இருக்கின்றன, ஒன்று புளோரிடாவில் உள்ளது. நாங்கள் இப்பொழுது ஆப்பிரிக்காவிற்குப் போகிறோம் என்று உடனே இன்று கேள்விப்பட்டேன். கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு நான் அதற்குள் வரும் போது, திரும்பி வருவேன், நீங்கள் ஒட்டு மொத்தமாக, ஒரு வித்தியாசமான கூட்டத்தைக் காணப் போகிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 58. அந்தக் காரியங்கள் இருக்கின்றன என்று நான் விசுவாசிக்கிறேன்: நான் ஒரு கூட்டம் ஊழியக்காரர்களைப் பெற்று, அவர்களை ஒன்றாகக் கூடிவரும்படி செய்ய விரும்புகிறேன். அதைக் குறித்த காரியம் என்னவென்றால், பிரசங்கிமார்கள் தேவனுடைய ஆவிக்குள் அசைவதை உங்களால் காண முடியுமானால், ஏதோவொன்று போய்க் கொண்டிருப்பதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள், அப்போது நீங்கள்... அவர்கள் அதை சபைக்கு எடுத்துக் கொண்டு வந்து, சபையானது அதை இங்கும், அங்கிருந்து அங்கேயும் எடுத்துச் செல்கிறது. ஒரு புதிய ஸ்தாபனம் அல்ல, ஆனால் நாம் பெற்றிருக்கிற இவைகளை எழுப்புதல் அடையச் செய்து, மீண்டும், மறுபடியுமாக, தேவனுடைய இராஜ்யத்திற்கு, அப்போஸ்தல விசுவாசத்திற்குத் திருப்புவது. நண்பர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் - நாம் ஏதோவொன்றின் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். 59. சென்ற இரவில், இரவு நேரத்தில், அநேகமாக நீங்கள் யாவரும் படுக்கையில் இருந்த போது, நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னால் அவரை உணர முடிந்தது, அவர் எனக்கு அருகில் இருந்தார். நான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, எனக்கு முன்பாக இந்த வேதாகமம் இருக்க, அவர் உடனடியாக, மீண்டும் எனக்கு முன்பாக கண்ணுக்குப் புலப்படும் விதத்தில் தோன்றப் போகிறார், ஒருக்கால் நான் மீண்டும் கடல் கடந்து வெளிநாட்டுக்குப் போவதற்கு முன்பே அது நிகழலாம். ஓ, அவர் தோன்றுவார் என்று நான் நம்புகிறேன். நான் அவரிடம் பேசுவதற்கு அநேக காரியங்கள் எனக்கு இருக்கின்றன. அவர் எனக்குத் தோன்றுவார் என்று நான்... நான்... நான் நம்புகிறேன், நேரத்தோடு நான் திரும்பி வருவேன், அப்போது தேவனுடைய சிங்காசனத்திலிருந்து நேரடியாக வருகிற ஒரு செய்தியை நான் உடையவனாயிருப்பேன். ஓ, அவர் எவ்வளவு அற்புதமாய் இருக்கிறார். சரி. இப்பொழுது, நாம் கைக்குட்டைகளுகக்காக ஜெபிப்போம். 60. எங்கள் பரலோகப் பிதாவே: "அவர் என்ன சொல்லுகிறாரோ, அதைச் செய்யுங்கள்,” என்று மரியாள் அந்த வேலைக்காரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மேலும் கர்த்தாவே, இன்றிரவும் அது தான் எங்கள் நம்பிக்கைகளாக இருக்கின்றன, நீர், "செய்யுங்கள்” என்று கூறுவதைச் செய்வது. பிதாவே, நான் ஜெபிக்கிறேன், உமது வேதாகமத்தில் நீர் நியமித்திருக்கிறபடி, அவர்கள்..... அவர்கள் பவுலுடைய சரீரத்திலிருந்து கைக் குட்டைகளையும் மேல் ஆடைகளையும் எடுத்தார்கள் என்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, நாங்கள் பரிசுத்த பவுல் அல்லவென்று அறிந்துருக்கிறோம், ஆனால் நீர் இன்னும், சுகமளிக்கிற இயேசுவாகவே இருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். இந்த கைக்குட்டைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்த வேண்டுமென்று நான் வேண்டிக்கொள்கிறேன், நீர் அவர்களை சுகப்படுத்த வேண்டும் என்று எல்லாவிடங்களிலும் உள்ள விசேஷமான விண்ணப்பங்களுக்காக நான் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். இதை அருளும், கர்த்தாவே, அவர்கள் தாமே உமது மகிமைக்காக சுகத்தைப் பெற்றுக்கொள்வார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 61. கூட்டங்களில், என்னுடைய ஏழ்மையான, ஐரிஸ் இருதயம் மிகவும் சிலிப்படையும்படியாக ஏதோவொன்றை நான் கண்டிருக்கிறேன், என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது, ஒரு வாரத்திற்கு முன்பு, எனக்குத் தெரிந்திராத, கர்த்தரைக் குறித்த ஏதோவொன்றை நான் - நான் - நான் அறிந்திருக்கிறேன். பாருங்கள்? அவருக்கு ஒரு வாய்க்கால் உண்டு என்று எனக்குத் தெரியும். "நீங்கள் கொடிகளாக இருக்கிறீர்கள்.” கனிகொடுக்கிறவர்கள் நாம் தான், அவர் சக்தியை கொடுக்கும் திராட்சைச் செடியாக இருக்கிறார், ஆனால் கிளைகள் தான் கனியைக் கொடுக்கின்றன. அது சரிதானா? "என் நாமத்தினாலே, நீங்கள் பிசாசுகளைத் துரத்துவீர்கள்; எதுவும் உங்களைச் சேதப்படுத்தவே சேதப்படுத்தாது. அது சரிதானா? அப்படியானால் நாம் தேவனுடைய ஜீவனின் முட்டையில் பொதியப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு விசுவாசியும். 62. அது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வது போன்று இருக்கிறது, அப்போது தேவன் உங்களுக்கு ஒரு வங்கி புத்தகத்தைக் கொடுக்கிறார். ஒவ்வொரு காசோலையின் கீழும், இயேசுவின் நாமம் அதன் மேல் கையொப்பம் இடப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையான எதற்காகவும், அந்தக் காசோலையை நிரப்பி, அதை உள்ளே அனுப்பி விடுங்கள். அவர் - அவர் - அது நன்றாக இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஏன்? கல்வாரியிலேயே அந்த வங்கியில் வைப்புத்தொகை வைக்கப்பட்டு விட்டது. "அவர் நம்முடைய மீறுதல்களுக்காக காயப்பட்டார், நம்முடைய அக்கிரம்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு சமாதானனத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது: அவருடைய தழும்புகளால் குணமானோம்." அந்த மீட்பின் ஆசீர்வாதங்களில் எதுவும் ஒவ்வொரு விசுவாசிக்கும் சொந்தமாக இருக்கிறது; அந்த காசோலையை நிரப்ப நீங்கள் பயப்படுவீர்களானால், நல்லது, அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவே செய்யாது. நீங்கள் அதை நிரப்பி, அதை கிழித்தெடுத்து, உங்கள் சட்டைப்பையில் வைத்துக் கொள்வீர்களானாலும், அது ஒருக்காலும் எந்த நன்மையும் செய்யாது. அதை அப்படியே கிழித்தெடுத்து, அதை அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அப்போது எது பொறுப்பெடுத்துக் கொள்கிறது என்று கவனித்துப் பாருங்கள். தேவன் அதைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வார். அது சரிதானா? 63. பில்லி, நான் உனக்காகக் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உன்னை நினைத்தேன்... நீ அங்கே மேலே வரும்படியாக, நான் உனக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது என்னவாக இருந்தது? W-தானா? W-கள், மற்றும் S. நல்லது, அப்படியானால், நாம் R-லிருந்து அழைப்போம். வில்லியம்ஸ். சரி. ஒன்று முதல் நூறு வரை, ஒவ்வொரு விதத்திலுமா? நல்லது, நாம் இன்றிரவு ஜெப அட்டை W-லிருந்து அழைப்போம், அதிலிருந்து, நாம் 85-லிருந்து, நூறு வரையில்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்; இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். 64. எங்கள் பரலோகப் பிதாவே, இப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும், உலகத்தின் காரியங்களுக்கு எங்கள் இருதயங்களில் இருக்கிற நிழல்களை இல்லாமல் அழித்துப் போட்டுவிட்டு, உம்மோடு கூட நாங்கள் எங்களைத்தானே அடைத்துக் கொள்வோமாக. "கர்த்தாவே, நான் என்னுடைய ஸ்தாபனத்தைக் குறித்து மறந்து விடுகிறேன், மற்றும் நாளைய தினத்தைக் குறித்தும், அதன் வேலைகளைக் குறித்தும், அதன் உழைப்பைக் குறித்தும் மறந்துவிடுகிறேன், கர்த்தாவே, நான் அப்படியே உம்மிடம் வருகிறேன். எனக்கு அடுத்து யார் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் மறந்து விடுகிறேன். நான் என்னுடைய வியாதியைக் குறித்தும், என்னுடைய துன்பத்தைக் குறித்தும் மறந்து விடுகிறேன். நான் இப்பொழுது என்னைத்தானே உம்மோடு கூட அடைத்துக் கொள்கிறேன். ஓ கர்த்தாவே, என்னை ஊக்குவியும், விசுவாசிக்கும்படி எனக்கு உதவி செய்யும். வேத வாக்கியம் போதிக்கிற எல்லாவற்றையும் விசுவாசிக்கவும், தீர்க்கதரிசிகளும், சீஷர்களும், அப்போஸ்தலர்களும், உம்முடைய பரிசுத்த மனிதர்களும், அவர்கள் பரிசுத்த ஆவியால் இயங்கின போது, சொல்லி இருக்கிற யாவற்றையும் விசுவாசிக்க எனக்கு உதவி செய்தருளும். உமது குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்றும், அவர் செய்தவைகளை அவருடைய விசுவாசிகளும்கூட செய்வார்கள் என்று இன்றிரவு எங்களுக்கு போதிக்கப்பட்டபடி. அவர் ஒரு சுகமளிப்பவர் என்று உரிமைகோரவில்லை என்றும், பிதாவானவர் அவருக்குக் காண்பித்தவைகளையே அவர் செய்தார் என்று மாத்திரமே அவர் உரிமை கோரினார் என்பதையும் நாங்கள் உணர்ந்து கொள்ளுகிறோம். அவரால் செய்ய முடிந்தது அவ்வளவு தான். அவர் அவர்களுடைய சிந்தையில் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார். அப்படியானால், பிதாவே, இன்றிரவும் நீர் அந்த உண்மை நிலையில் எங்களுக்கு தோன்றியருளும், நாங்கள் விசுவாசிப்போம்” என்று கூறுங்கள். 65. கர்த்தாவே, உமது ஊழியனாகிய எனக்கு நீர் உதவி செய்து, உமது ஊழியனை அபிஷேகியும்; கர்த்தாவே, மிகவும் அபாத்திரன் (நான்). சென்ற இரவுக்கு முந்தின இரவைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், என்னால் மெல்லப் பேசவும் கூட முடியாதிருந்தது, என்ன காரியம் என்று எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால் சற்றே பேசுகையில், இப்பொழுது எல்லாமே சரியாகிவிட்டது. 66. ஆனால் தேவனே, இன்றிரவு, இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரும் சரியாகிவிடும்படி அருளும். நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். என் மேல் இரக்கம் காண்பித்த நீர், அவர்களுக்கும் இரக்கம் காண்பித்தருளும். இயேசு கிறிஸ்து மகிமைப்படும்படியாக, மனிதனுடைய இருதயத்திற்கு தேவனுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துகிற தேவனிடத்திலிருந்து வந்த செய்தியாளனாகிய, உமது தூதனானவரை இப்பொழுது நீர் அனுப்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். (ஒலிநடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 67. பெரிய.... காரியமானது அப்படியே மேலே வந்து கொண்டிருக்கிறது. நம்முடைய எஜமானர், அவர் எனக்குக் கொடுத்த இந்த சூட்டை அணிந்தபடி, இன்றிரவு இங்கே நின்று கொண்டிருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? அவர் ஒரு சுகமளிப்பவர் என்று உரிமை கோரியிருக்க மாட்டார். அவர், "பிதாவானவர் எனக்குக் காண்பிப்பதையே நான் செய்கிறேன்” என்று மாத்திரமே கூறினார். அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதையும், அவர்கள் என்ன செய்திருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். நம்முடைய வேத பாடத்தில், நாத்தான்வேல் பிலிப்புவை அழைக்கிறதற்கு முன்னே, அல்லது அதற்கு மாறாகவோ, பிலிப்பு எங்கே இருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஸ்திரீயின் இருதயத்திலிருந்த நினைவுகளை... அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால் சுகமளிக்கும்படியாக, அவர் சுகமளிப்பதற்கு உரிமை கோரவில்லை, பிதாவானவர் அவருக்குக் காண்பித்ததை மாத்திரமே அவர் செய்தார். அது சரிதானா? பரிசுத்த யோவான் 5:19. 68. இப்பொழுது, அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், அவர், "நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள்” என்றார். அது சரிதானா? நல்லது, அப்படியானால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து இருந்தால், அவர்களுடைய சிந்தனைகளின் இரகசியங்களை அறிந்து கொள்ளும்படி அவரிடம் அங்கேயிருந்த அந்த வல்லமையானது, இவர்களுக்கு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்பதையும், அவர்கள் என்ன செய்திருந்தார்கள் என்பதையும், இவர்கள் சுகமடையாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பதையும், அதைப் போன்ற மற்றவைகளையும் அவரால் அவர்களிடம் கூற முடிந்திருக்கும். அது சரிதானா? ஆனால் இப்பொழுது, உங்கள் கரத்தை மேலே உயர்த்தியிருக்க, பரிசுத்த யோவான் 5-ல், இயேசு அந்த முடமானவர்கள் மற்றும் குருடான ஜனங்களினூடாகக் கடந்து சென்ற போது, பெதஸ்தா குளத்தருகில் அவர்களில் ஒருவரையும், அவர் ஒருக்காலும் சுகப்படுத்தாமல், திருகின உறுப்புடையவர்கள், மற்றும் குருடர்கள் மற்றும் சப்பாணிகள், முடவர்களாகியிருந்த, அவர்களில் ஆயிரக்கணக்கானோராயிருந்த அவர்கள் எல்லாருடைய பக்கமாகவும் போய்விட்டார் என்று எத்தனை பேருக்குத் தெரியும். ஏதோவொருவிதமான கோளாறு உடையவனாக, ஒரு கோரைப்பாயில் (pallet) படுத்துக் கொண்டு இருந்த ஒரு மனிதனிடம் சென்றார். ஒருக்கால் அவனுக்கு புரேஸ்டேட் சுரப்பி கோளாறோ அல்லது ஏதோவொன்றோ, ஒருக்கால் காசநோயோ இருந்திரக்கலாம்; அது அவனுக்கு 38 வருடமாக இருந்தது, அவர் அவனைச் சுகப்படுத்தினார். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று வேத வாக்கியம் கூறுகிறது. 69. இப்பொழுது, யூதர்கள் கேள்வி கேட்ட போது (19-வது வசனம்), அவர், "மெய்யாகவே, மெய்யாகவே” என்றார். இப்பொழுது, கத்தோலிக்கரே, உங்கள் மொழி பெயர்ப்பில், டுவே மொழிபெயர்ப்பில், அது, "ஆமென், ஆமென்” என்றிருக்கிறது. மூல கிரேக்க பாஷையிலிருந்து, கிங் ஜேம்ஸ்-ல் உண்மையான மொழிபெயர்ப்பில், அது கூறுகிறது - அது, "மெய்யாகவே, மெய்யாகவே” என்று கூறுகிறது, அதற்கு, முற்றிலும், முற்றிலுமாக, நான் உங்களுக்குக் கூறுகிறேன், பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, அவர் தாமாக எதையும் செய்ய மாட்டார்: குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்று அர்த்தம். அது சரிதானா? இப்பொழுது, வேதாகமம் அவ்வாறு கூறுகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும். உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பரிசுத்த யோவான் 5. சரி. இப்பொழுது, இயேசு, பிதாவானவர் செய்வதை முதலில் காண்பது மட்டுமாக, அவர் எதையுமே செய்யவில்லை. அது சரிதானா? அவர்-அவர் அவர்களுடைய நினைவுகளை அறிந்து கொண்டார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நல்லது... அப்படியானால், அவர் அவர்களுடைய மனதை வாசித்தார். அது சரிதானா? 70. இங்கே வெளியில், மனதிலுள்ளவைகளை வாசிக்கும் இவர்களில் ஒருவர் அல்ல, அது பிசாசின் கிரியைாக இருக்கிறது. தேவன் வைத்திருக்கிற எல்லாவற்றிற்கும் பிசாசிடமும் ஒரு மாதிரி (pattern) இருந்திருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு பழைய போலியான கள்ள டாலர் நோட்டை நீங்கள் கண்டால், அங்கே ஒரு உண்மையான டாலர் நோட்டு இருக்கிறது என்றும், அதிலிருந்துதான் அது செய்யப்பட்டிருக்கிறது என்றும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் கவனியுங்கள், மனதிலுள்ளவைகளை வாசிப்பவர்களும் மற்றவர்களும் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்துவதையோ, கிறிஸ்துவின் வருகையைப் பிரசங்கம் பண்ணுவதையோ, ஜனங்களை இரட்சிப்படையப் பண்ணுவதையோ, ஜனங்களைப் பரிசுத்த ஆவியால் நிறையப் பண்ணப்படுவதையோ நீங்கள் காண்பதில்லை. ஒரு சில காரியங்களை யூகிக்கும்படியாக, அவர்கள் அங்கே வெளியேயிருந்து, ஒரு டாலர் நோட்டைக் குறித்து உங்களிடம் குற்றம் சுமத்துகிறார்கள். அது பிசாசாக இருக்கிறது. அது சரியே. 71. ஆனால் தேவனிடம் வல்லமை இருக்கிறது, அவர் தம்முடையவைகளில் பரிபூரணராக இருக்கிறார். இயேசு, 'நான் என் பிதாவிடம் போகிறபடியால், நான் செய்கிறவைகளை நீங்களும் கூட செய்வீர்கள்," (அது சரிதானா?) அதைக் காட்டிலும் அதிகமாக, அல்லது பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்” என்று கூறினார். இப்பொழுது, இதோ நின்று கொண்டிருக்கிறார். இவர் நோயாளியா? சகோதரி. சரி. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில், வேறு யாரோ ஒருவர் சுற்றிலும் நின்று கொண்டிருக்கிறார், நான் பேசுதில் ஆர்வம் உள்ளவனாயிருக்கிறேன் மேலும் நான்..... 72. நான் கடந்த சில நிமிடங்களாக, நான் அவ்வாறு இருந்து வருகிறேன் என்று இங்கேயிருக்கும் எல்லாருக்கும் தெரியும், ஏதோவொன்றிற்காக ஒரு விதமாக மெதுவாக தாமதித்துக் கொண்டிருக்கிறேன், அதாவது, நான் அவருடைய பிரசன்னத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்; அவருடைய பிரசன்னம் இல்லை என்றால், நான் வெறுமனெ... இன்றிரவு அது ஒரு சிறு ஊனமுற்றவர் என்று உணருகிறேன். நீங்கள் கவனிப்பீர்களானால், அதோ அங்கே ஆவி இருக்கிறது, அங்கேயும், இங்கேயும், அங்கேயும் ஆவி இருக்கிது; என்னைச் சுற்றிலும் எல்லாவிடங்களலும் ஆவிகள் இருக்கின்றன. பாருங்கள்? ஒவ்வொரு நபரிடமும் ஒரு ஆவியிருக்கிறது. மேலும் இப்பொழுது, கவனியுங்கள்: இங்கே யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கே யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், இங்கே யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கே யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கே யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அபிஷேகமானது இறங்கி வரும்போது, இங்கேயுள்ளது, இந்த வழியாகவும், இந்த வழியாகவும், இந்த வழியாகவும், இந்த வழியாகவும் இழுத்துக் கொண்டிருக்கும். பாருங்கள்? அப்போது நீங்கள் ஒரு நபரை உங்களிடம் கொண்டு வர வேண்டும், உங்களால் இங்கே காணக் கூடிய இடத்திற்கு அசைந்து கொண்டிருக்கும் உங்களுடைய சொந்த ஆவியிடம் வரும் இடத்திற்கான ஒரு நிலைக்கு வந்தாக வேண்டியிருக்கிறது, அப்போது வெளியே மற்ற இடங்களிலும் அது தெரிந்து கொள்வதை உங்களால் காண முடியும். பாருங்கள். 73. ஆனால் இப்பொழுது, இந்த மனிதனை இதற்கு முன்பு நான்... நான் ஒருக்காலும் கண்டதே கிடையாது. நாங்கள் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், அப்படித்தானே, ஐயா... நான் உம்மை ஒருபோதும் கண்டதேயில்லை. நான் எப்பொழுதாவது உம்மைக் கண்டிருக்கிறேன் என்று நினைக்கவில்லை. நல்லது, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தான் நான் பட்டணத்திற்கு வந்தேன், வெறுமனே, என்னுடைய உடைகளை மாற்றி விட்டு, இங்கே வருவதற்குப் போதுமான நேரம் தான் இருந்தது. எனவே, நீர் வெறுமனே ஒரு மனிதனாக இருந்தீர், இங்கே அவர்கள் ஒரு ஜெப அட்டையைக் கொடுத்தார்கள், நீர் அப்படியே இங்கே மேலே மேடைக்கு அழைக்கப்பட்டீர், அதற்கு இருப்பது எல்லாமே அவ்வளவு தான். 74. ஆனால் இப்பொழுது, வேதாகமத்தில் நீர் கேள்விபட்டிருக்கிற அந்தக் காரியங்களையும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் நீர் விசுவாசிக்கிறீரா? அது சத்தியம் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீர். அவர் இன்றிரவு இங்கேயிருக்கிறார் என்றும், நான் நின்று கொண்டிருக்கிற இடத்தில் இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்றும், நாம் ஒருமித்து நின்று கொண்டிருந்தோம் என்றும், அவர் காணக்கூடியவிதத்தில் இருந்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா.... 75. பாரும், அவர்... இன்றிரவு கிறிஸ்துவிடம் இருக்கிற ஒரே கரங்கள் நம்முடைய கரங்கள் தான், அவரிடம் இருக்கிற ஒரே உதடுகள் நம்முடைய உதடுகள் தான். அவர் பிதாவுக்கு அருகில் அமர்ந்து, மூன்றாவது நபராகிய, பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பியிருக்கிறார், திருத்துவம், அவருடைய ஜீவனைக் குறித்து சாட்சி கொடுக்கும்படியாக அவர் அனுப்பியிருக்கிறார், அது தேவனாக இருக்கிறது. அது நமக்குள்ளிருக்கிற தேவனாக இருக்கிறது. நாம் ஒரு வடிவத்திலுள்ள தேவர்களாக ஆகிறோம் என்றும், நாம் அவ்வாறு ஆகியிருக்கிறோம் என்று வேதாகமம் கூறியுள்ளது (இயேசு அவ்வாறு கூறியுள்ளார்); வேதவாக்கியம் அவ்வண்ணமாகக் கூறுகிறது. பாருங்கள்? நாம் தேவர்களாக இருக்கிறோம். அதற்கு என்ன காரணம்? நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம். நான் -நான்.... அந்த விதத்தில் நாமிருக்கிறோம், ஏனென்றால், நான் ஒரு பிரன்ஹாமாக இருப்பது போன்று, அதற்குக் காரணம் நான் பிரன்ஹாம் கிளையிலிருந்து வெளியே வந்தவனாயிருக்கிறேன். நாம்.... அந்த விததத்தில், நாம் - நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கும் காரணத்தினால், தேவனுடைய சந்ததியாயிருக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 76. இப்பொழுது, உங்களால் எவ்வளவு பயபக்தியாக இருக்க முடியுமோ அவ்வளவு பயபக்தியாக எல்லாரும் இருக்கும்படியாக நான் விரும்புகிறேன். நீங்கள் களிகூர்ந்து கொண்டும், சந்தோஷமாகவும் இருக்கும்படி நான் விரும்புகிறேன். நல்லது இப்பொழுது, நான், உங்கள் பிள்ளைகளை உங்கள் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதை நீங்கள் கேட்டால், நீங்கள் நிச்சயமாக இருந்து, அதைச் செய்து விடுங்கள், தாயாரே; ஏனென்றால் இங்கே இன்றிரவு காக்கை வலிப்பு உடைய இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் அமர்ந்திருக்கிரார்கள், அது மிகவும் ஆபத்தான காரியமாக இருக்கிறது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் போய் விடும், அப்படியே.... நாம் போராட வேண்டியிருக்கிற மிக மோசேமாக காரியம் காக்கைவலிப்பாக இருக்கிறது. 77. இப்பொழுது, ஐயா? இயேசு கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீயிடம் பேசினது போன்று, நான் ஒரு நிமிடம் உம்மிடம் பேசும் போது. அவளிடம் பேச வேண்டுமானால், உமக்குத் தெரியும், அதைக் குறித்து என்னுடைய கருத்து எனக்குண்டு, அதாவது, அவர் சீஷர்களைத் தூரமாக அனுப்பினார். புசிக்க ஏதாவதை வாங்கும்படியாக, அவர் சீஷர்களை அனுப்பினபோது, அந்த ஸ்திரீ அங்கே இருக்கப் போகிறாள் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்போது, அவள் வந்தபோது, அது பிதவானவர் அவரிடம் காண்பித்திருந்த அதேவிதமாக இருந்தது, அவர்... அவர் ஒரு ஸ்திரீயோடு தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. எனவே அந்த ஸ்திரீ வெளியே வந்த போது, அதுதான் அவர் ஒரு தரிசனத்தில் கண்டிருந்த ஸ்திரீயாக இருந்தது. அவர், "இங்கே வா. எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடு" என்றார். அதற்கு அவள், "யூதர்களாகிய நீங்கள்... நீங்கள் இப்படிப்பட்ட சமாரியர்களிடம் கேட்பது வழக்கமில்லையே" என்று கூறினாள். 78. அவர், ஆனால் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது யாரென்று நீ அறிந்திருந்தால், குடிக்கும்படி என்னிடமே கேட்டிருப்பாய்" என்று கூறினார். அப்போது அவர், அவர் அவளிடம் சற்று பேசின பிறகு, அவர் நேராக சென்று, அவளுடைய கோளாறை அவளிடம் கூறினார். அது சரிதானா? 79. இப்பொழுது, நீர்... ஏதோவொன்று நடந்து கொண்டிருக்கிறது என்று உணருகிறீர். பாரும். அது - அது அவருடைய பிரசன்னமாக இருக்கிறது. நீர் அப்படியே சற்று ஒரு நிமிடம், அவருடைய ஊழியக்காரனாக, அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிற என்னை நோக்கிப் பாரும். நீர்.... இப்பொழுது, அது உம்மை புண்படுத்தாது. பாரும்? ஐயா, அது உமக்குத் தீங்கு செய்யாது. நீங்கள் ஒரு... கொண்டிருந்தீர். ஏதோவொன்தை நான் காண்கிறேன், அது -அது ஒரு விபத்தாக இருக்கிறது. நீர் காயப்பட்டிருக்கிறீர். அது ஒரு சுரங்கம் அல்லது ஏதோவொன்றைப் போன்ற ஒரு ஒரு ஒரு ஒரு இடத்தில் இருக்கிறது; அது ஒரு சுரங்கத்தில் நடந்த விபத்தாகும், நீர் காயமுற்றிருக்கிறீர். உம்முடைய முகத்தின் பக்கவாட்டிலும் முடமாகிப்போய்விட்டது, உமது காதிலும் உமக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. அது உண்மைதானா? அது உண்மை என்றால், உமது கரத்தை மேலேய உயர்த்தும். இப்பொழுது, சற்று பொறும், அங்கே ஏதோவொன்று இருந்தது.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அது எப்போதும் எதைச் சொன்னாலும், அது சரியாகவே இருந்தது. இப்பொழுது அது - அது என்னுடைய சத்தம் தான். ஆனால் அது நான் பேசிக் கொண்டிருப்பது அல்ல. பாரும். நீர் என்னை விசுவாசிக்கிறீரா? நீர் சுகமடைய விரும்புகிறீரா? நான் அவரிடம் வேண்டிக் கொண்டால், நீர் சுகத்தைப் பெற்றுக் கொள்வீர் என்று விசுவாசிக்கிறீரா? அப்படியானால் இங்கே வாரும். 80. ஓ தேவனே, என்னுடைய சகோதரன் மேல் மனமிரங்கும், நான் இவரை உம்முடைய நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். தேவனே, நீர் இவரைச் சுகப்படுத்தி, இவரைக் குணப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஓ நித்தியமானவரே, ஜீவனின் படைப்பாளியே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அருளுபவரே, இந்த மனிதர் உம்முடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கையில், ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, மீறதல்களையும் எடுத்துப்போடும், இந்தத் துன்பம் இவருடைய சரீரத்தை விட்டு விலகிப்போவதாக, இவர் தாமே இவருடைய அன்பார்ந்தவர்களிடமாக வீட்டிற்குச் சென்று, தம்முடைய ஜீவியம் முழுவதும் நலத்தோடும் ஆரோக்கியமாகவும் இருப்பாராக. நீர் அதை அருளுவீரா, கர்த்தாவே? 81. இப்பொழுது, சாத்தானே, தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரிலும், பரிசுத்த ஆவியானவரின் ஸ்தோத்தரிக்கப்பட்ட பிரசன்னத்தின் பேரிலும் ஒரு தூதனானவரின் மூலமாக கொடுக்கப்பட்ட ஒரு வரத்தின் பேரிலும்: இவரை விட்டு வெளியே வரும்படி, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் உனக்கு கட்டளையிடுகிறேன். 82. சற்று பொறுங்கள். அது உம்முடைய முகத்தின் பக்கவாட்டில் இருந்தது...? அங்கே உமது காதினால் நான் கூறுவதை உம்மால் சரியாகக் கேட்க முடிகிறதா? நான் கூறுவது சரியாகக் உமக்குக் கேட்கிறதா? நான் கூறுவது கேட்கிறதா? உம்முடைய பக்கவாட்டிலும், மற்றும் எல்லாமும் சரியாக இருக்கிறதா என்று கைகளினால் தொட்டுப்பாரும்? என்னுடைய கரத்தைப் பிடித்து, இப்பொழுது அதை அழுத்திப் பாரும். இப்பொழுது, நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா, நீர் விசுவாசிக்கவில்லையா? நீர் அவரைச் சேவிக்க விரும்புகிறீரா? அந்த நரம்புகளை அழித்துக் கொண்டு இருக்கும் ஏதோவொன்ற நான் உம்மிடம் கூறினால், நீர் அதை இப்பொழுதே நிறுத்திவிடுவீரா? நீர் விட்டுவிட வேண்டிய ஒரு பழக்கம் உமக்கு இருக்கிறது. நீர் புகைப்பிடிருக்கிறீர்; நீர் புகையிலைப் பொருட்கள் உபயோகப்படுத்துகிறீர். நீர் அதை விட்டுவிடுவீரா? நீர் இதை இப்பொழுதே நிறுத்துவீரா? நீர் உம்முடைய ஜீவியத்தை முற்றிலுமாக கிறிஸ்துவுக்குக் கொடுத்து, பிறகு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைத் தேடுவீரா? மறுபடியும் இங்கே வாரும். 83. ஓ தேவனே, இவருடைய பாவத்தை அறிக்கை செய்ததின் பேரில், நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். இப்பொழுது, சாத்தானே, நீ இனியும் இவரைப் பிடித்து வைத்திருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவரை விட்டு வெளியே வா. இந்த மனிதரை விட்டு வெளியேறும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். இந்த அறிக்கையின் பேரிலும், இயேசு கிறிஸ்துவின் இடத்திலுள்ள எதிர்ப்பார்ப்பின் பேரிலும், இவர் ஏமாற்றம் அடையவே முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவரை விட்டுப் போ, இவரை விட்டு வெளியே வா. 84. இப்பொழுது, அது வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? இப்பொழுது, உம்முடைய கரத்தை மேலே உயர்த்தும், இரு கரங்களையும் மேலே உயர்த்தி, இப்பொழுது, அவைகளை ஒன்றாக கை தட்டும். அங்கே தான் காரியம். இப்பொழுது அதெல்லாம் முடிந்துவி ட்டது. இப்பொழுது, நீர் களி கூர்ந்தபடியே மேடையை விட்டு போய், பரிசுத்த ஆவியைப் பெற்று, ஏதோவொரு நல்ல முழு சுவிசேஷ சபைக்குப் போய், ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளலாம். ஆமென். நாம், கர்த்தருக்கு துதி உண்டாவதாக" என்று கூறுவோம். (சரி, ஒரு நிமிடத்தில்) நாம் தேவனுக்குத் துதியைச் செலுத்துவோம். இப்பொழுது வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா, ஐயா? ஆமென். நீர் இப்பொழுது சரியாக இருக்கிறீர், சகோதரனே. என்ன சொல்லுகிறீர்? ஆம், ஐயா, நீர் இப்பொழுது சரியாகவே இருக்கிறீர். நீர் உமது வீட்டிற்குத் திரும்பிப் போய், களிகூர்ந்து கொண்டிரும். நாம், "கர்த்தருக்கு துதி உண்டாவதாக” என்று கூறுவோம். எல்லாரும், "கர்த்தருக்குத் துதி உண்டாவதாக” என்று கூறுங்கள். மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, கத்தோலிக்கர்களே, ஒவ்வொருவரும், "கர்த்தருக்குத் துதி உண்டாவதாக” என்று சொல்லுங்கள். 85. இந்த மனிதர் தம்முடைய நிலையில் அங்கே மேலே வருவதைக் காண்கிறீர்களா? அவர் நேராக நடந்து செல்வதைப் பார்க்கிறீர்களா? வித்தியாசத்தைப் பார்க்கிறீர்களா? அவர்களில் ஒருவர் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்; அந்தப் பாவம் இன்னுமாக அவர் மேல் இருந்தது. அந்தக் கையானது அப்பொழுதும் கீழே பிடிக்கப்பட்டிருந்ததும் மற்ற காரியங்களுமான, அந்த எதிர்வினையை அவர் ஏன் பெற்றிருக்கவில்லை என்று நான் வியந்து கொண்டிருந்தேன். நான், என்ன தான் சம்பவித்தது?” என்று வியந்தேன். காரியம் என்னவாக இருந்தது? நான் மீண்டுமாக திரும்பிப் பார்த்தபோது, அந்த மனிதர் ஒரு தெரு மூலையில் புகைப்பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன், அது தேவனுடைய பார்வையில் சரியல்ல என்று அறிவேன். அது சரி. எனக்குத் தெரிந்த அந்தக் காரியங்களை அறிந்து, அது இருக்க முடியாது என்பதை அறிந்தேன். மேலும் அங்கே, அப்போதே தேவன் அவரைச் சுகப்படுத்தி, அவரைக் குணமாக்கினார். 86. நாமெல்லாரும் கர்த்தரைத் துதித்து, நன்றியாக இருக்க வேண்டும். நீங்கள் யாவரும், நீங்கள் ஒவ்வொருவரும், சரியாக இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் நன்றியுள்ளவர்களாகவும், மேதோடிஸ்டுகளாகிய நீங்களும் நன்றியுள்ளவர்களாகவும், கத்தோலிக்கர்களாகிய நீங்கள் நன்றியுள்ளவர்களாகவும், பெந்தெகோஸ்தேயினராகிய நீங்களும், நீங்கள் யாவருமே தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், 'இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி' என்று கூறுங்கள். கம்யூனிஸமும் நாத்திகமும் தேசத்தை வீசியடித்துக்கொண்டு போகும்போது; சற்றே சிந்தித்துப் பாருங்கள்: சென்ற வருடம் உலகத்தில், 13 மில்லியன் கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள் பொரித்து வெளி வந்தார்கள் (hatched out), 13-மில்லியன் நாஸ்திகர்கள். இங்கேயுள்ள தேவனுடைய வல்லமையானது, காணக்கூடிய விதத்தில் அடையாளங்களையும் மற்றும் காரியங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறது, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைப்பதின் மூலமாக, நாம் சரியாக இருக்கிறோம், அவர் இங்கேயிருக்கிறார். அது நம்மை மிகவும் சந்தோஷமடையச் செய்தாக வேண்டும், நாம் அதை நாளைய தினம் எல்லாவிடங்களிலும் பரப்பி, அதைக் குறித்து முழு உலகத்திடமும் கூறுவோம். சரி, இப்பொழுது. 87. ஆம், ஐயா. சரி, ஐயா. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தேவனாகவே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாகவே, நீர்... நீர் முடமாயிருக்கிறீர், அல்லது உமது கையானது மோசமாக இருக்கிறது என்பதைக் காண்கிறேன். இப்பொழுது, என்னால் உம்மைச் சுகப்படுத்த முடியுமானால், நான் அதைச் செய்திருப்பேன், நான் அதைச் செய்ய மகிழ்ச்சியாய் இருந்திருப்பேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது. தேவன் தான் அதைச் செய்ய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்வார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? அதைச் செய்யும்படி நான் அவரிடம் வேண்டிக் கொண்டால், நீர் சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் செய்வார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் சுகமடைய அவர் உமக்கு உதவி செய்வார். சரி, ஐயா. நீர் அதை விசுவாசித்தால், நீர் அதைப் பெற்றுக்கொள்ளும் வழி அதுதான். 88. இப்பொழுது, நாம் சற்று நேரம் அவரை நோக்கிப் பார்த்து, உமது கோளாறுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர்... அது, ஒரு கட்டியினிமித்தமாக உமது மூளையில் ஒரு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது, அந்தக் கட்டி அகற்றப்பட்டு விட்டது, அது தான் உம்மை முடமான நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. அது சரிதானா? இப்பொழுது, நான் அவரிடம் வேண்டிக் கொண்டால், நீர் சுகமடைவீர், நீர் சுகமடைய மாட்டீரா? இங்கே வாரும். 89. எங்கள் பரலோகப் பிதாவே, நான் இவர் மேல் கைகளை வைத்தால், இவர் சுகமடைந்து விடுவார் என்பதாக இவர் விசுவாசிப்பதாக, இம்மனிதர் சொல்லியிருக்கிறார், நான் அதைச் செய்கிறேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவரைச் சுகப்படுத்தும்படி உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 90. இப்பொழுது, விசுவாசித்தபடியே, போங்கள். போய் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும். நான் விரும்புகிறேன்... இப்பொழுது, வேண்டாம்... இப்பொழுது, அவர் அங்கே கீழே போகும் போது, அவர் அப்படியே ஒரு நிமிடம் உட்காரும்படிப்போகும் போது, நான் மறுபடியும் அவரைக் காண விரும்புகிறேன், வெறுமனே ஒரு சில நிமிடங்களில். மகனே, நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்தபடி, தொடர்ந்து போய்க் கொண்டிருக்க நான் விரும்புகிறேன். அவர் சொன்னார், நான்.., நான் அவர் மேல் கரங்களை வைத்தால், அவர் சுகமடைந்து விடுவதாக அவர் விசுவாசித்தார். அவர் அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். இவர் அதைச் விசுவாசித்தால், அவர் இன்னும் இன்றிரவிலும் அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அவர் சரியாக இப்பொழுதே அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. 91. எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் காண்கிற எல்லாமும், இந்தக் கூட்டத்தில், இங்கே நீங்கள் காண்கிறவைகளும் தேவனிடமிருந்து வருகின்றன என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது தேவனுடைய ஆவியானவர் அவைாடிக் கொண்டிருப்பது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் வெறுமனே உங்கள் சகோதரன், அது உங்களுக்குத் தெரியும். ஆனால் தேவனோ உங்கள் இரட்சகராக இருக்கிறார். நான் உங்கள் மனதிலுள்ளவைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லை, அப்படித் தானே, சீமாட்டியே? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்காதீர்கள். ஆனால் உங்களுடைய கோளாறு என்னவென்று நான் அறியும்படிக்கு தேவன் எனக்கு உதவி செய்யக் கூடும் என்று விசுவாசியுங்கள். அவர் அவ்வாறு உதவி செய்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் செய்வார் என்று நான் சொல்ல மாட்டேன. அவர் செய்வார் என்று நான்... நான் விசுவாசிக்கிறேன். 92. உங்கள் கோளாறு நரம்பு சம்பந்தமான கோளாறாக இருக்கிறது. நீங்கள் மிக, மிக பதற்றமுடையவர்களாக இருக்கிறீர்கள். இன்றிரவு அறையில், அதில் நிறைய காரியங்கள் நடந்தன, அதிகமாக பதட்டப்பட்டுக் கொண்டு இருந்தீர்கள். அது உண்மை தானா? நரம்புக் கோளாறு. இப்பொழுது, நீங்கள்.... இப்பொழுது, நரம்புக்கோளாறு என்பது, அது வெறுமனே ஒரு பொதுவான காரியம் தான், நாம் வேறு ஏதோவொன்றை அவரிடம் வேண்டிக்கொள்வோம். நான் அதைச் செய்யும்படிக்கே நீங்கள் விரும்புகிறீர்கள், நீங்கள் விரும்புகிறீர்கள்... நீங்கள்... வேறு ஏதோவொன்று உங்கள் சிந்தையில் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இப்பொழுது, நான் உங்கள் மனதிலுள்ளவைகளை வாசித்துக் கொண்டு இருக்கவில்லை. தேவனுக்குத் தெரியும், தேவனுக்கு முன்பாக என்னுடைய கரமும், இங்கே என்னுடைய வேதாகமமும் இருக்கிறது. பாருங்கள்? நீங்கள் ஒரு பிள்ளையைக் குறித்து கவலைப்படுகிறீர்கள். அது சரியல்லவா? அந்தச் சிறு பிள்ளைக்கு ஏதோவொரு விதமான சுரப்பிக் கோளாறு இருக்கிறது, அல்லது ஏதோவான்று இருக்கிறது. அது உண்மை அல்லவா? நீங்கள் நீங்கள் நீங்கள் இந்தியானாவிலிருந்து வரவில்லை, நீங்கள் இல்லினாயிஸிலிருந்து வருகிறீர்கள். அது சரி அல்லவா? நீங்கள் இங்கேயிருக்கும் அந்த ஆற்றைக் கடந்தீர்கள். அது உண்மை அல்லவா? இப்பொழுது, போய், உங்கள் பிள்ளையின் மேல் உங்கள் கரத்தை வையுங்கள். இருவரும், நீங்கள்... நல்லது, அவள்... அந்தக் குழந்தை இங்கே இல்லை, நீங்கள் அதை வீட்டில் விட்டு வந்திருக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் வீட்டிற்குச் சென்று, பிள்ளையின் மேல் உங்கள் கரத்தை வைக்கும்படி நான் விரும்புகிறேன், நீங்கள் இருவரும் சுகமடையப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்குப் போங்கள், தேவன் உங்களைச் சுகப்படுத்துகிறார். நண்பரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 93. இப்பொழுது, உங்களால் கூடுமான மட்டும் அவ்வளவு பயபக்தியாயிருங்கள். நன்றியுள்ளவர்களாக இருங்கள், நன்றியறிதலுள்ளவர்களாக இருங்கள். இப்பொழுது, இது ஒரு நிலைக்குப் போவதற்கான துவக்கமாக இருக்கிறது, அங்கே, அதற்கு முன்பு, நீங்கள் ஒரு சில நிமிடங்கள் பயபக்தியாக இருப்பீர்களானால், நாம்... நாங்கள் உங்களை அதிக நேரம் பிடித்து வைத்திருக்க மாட்டோம். என்னுடைய முகம் மிகவும் மரத்துப் போய் காணப்படுகிறது, என்னுடைய உதடுகள் பெரிதாகவும், என்னுடைய மூக்கும், என் முகம் முழுவதும் (பெரிதாக ஆகிவிட்டன. அதோ அங்கே, அதைப்போன்று, நான் பார்க்கிறேன், என்னால் மிக நன்றாகப் பார்க்க முடியவில்லை. மேலும் நான்... அந்த சீமாட்டி அப்படியே... சீமாட்டியே, நீங்கள் தான் இங்கே மேலேயிருந்தீர்களா? நான் கண்டேன், அந்த வெளிச்சமானது அங்கே வெளியிலுள்ளது. உங்களுக்கு நன்றி, அப்படியே.... 94. பாருங்கள், இதோ அது இருக்கிறது. இதுதான் இந்த சீமாட்டி, சரியாக இங்கே இருக்கிறார்கள். ஙம். உ-உம். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, சீமாட்டியே? நீங்கள்... இது ஏதோவொரு விதமான சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனையாக இருக்கிறது. அது சரி அல்லவா? அப்படியானால் எழுந்து நின்று, உங்கள் சுகத்தை ஏற்றுக் கொண்டு, இயேசு கிறிஸ்துவே, நான் இப்பொழுது, என்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள். பாருங்கள், உங்களுக்கு எந்த ஜெப அட்டையும் தேவையில்லை, வெறுமனே சுகமடைவது தான் அவசியமாயிருக்கிறது. இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவே, நீர் இவர்களை சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இவர்கள் வீட்டிற்குச் சென்று, பரிபூரணமாக சுகமடைவார்களாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே 95. இது ஏதோவொன்றாக உள்ளது, இல்லையா, ஓரு பெரிய சித்திரவதை, அல்லது ஏதோவொன்றாக இருக்கிறது, அங்கே... பற்றிய ஏதோவொன்று இருந்தது. நிச்சயமாக, ஆமாம், கண்களைக் குறித்து ஏதோவொன்றை நான் கண்டேன், அனால் இவர்கள் அணிந்திருந்தார்கள்... நல்லது, அது மீண்டுமாக அங்கே தான் இருக்கிறது. இல்லை, இது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற, இந்த சீமாட்டி தான், இவர்களுக்கு கண்ணில் கோளாறு இருக்கிறது, சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், கறுப்பாக காணப்படும் வஸ்திரத்தை அணிந்து, அங்கேயிருக்கிற அந்த சீமாட்டி. உங்களுடைய கண்கள் வெளியே தள்ளிவிட்டன, அவைகள் மோசமாக இருக்கின்றன, அவைகள் அவ்வாறு இல்லையா, சீமாட்டியே? இப்பொழுதே தேவன் உங்களைச் சுகப்படுத்தப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் கண்ணாடிகளை அணிந்திருக்கவில்லை. நான் வியந்து கொண்டிருந்தேன். ஒரு சீமாட்டி.... போவதாக இருக்கும் தரிசனத்தை நான் கண்டேன். அவளைச் சுற்றிலும் குருட்டு ஆவி இருப்பது போன்று காண்படுகிறது, ஆனால் என்னால் அவைகளைப் பிரித்துப் பார்க்க முடியாதிருந்தது. நீங்கள் இருவருமே ஒரே மாதிரியாக காணப்படுகிறீர்கள், நிறைய ஒரே மாதிரியாகவே உடையுடுத்தியிருக்கிறீர்கள். சரி, நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? தேவன் உங்களைச் சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவே, நீர் இவளைச் சுகப்படுத்தி, இவள் இப்பொழுது வீட்டிற்குச் சென்று, பரிபூரணமாக சுகமடைய வேண்டுமென்று, இயேசுவின் நாமத்தில், ஜெபிக்கிறேன். ஆமென். 96. எப்படியிருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள்.... சகோதரனே, உமக்கு நன்றி, அது ஒரு நல்ல மனப்பான்மை. ஆனால் இப்பொழுது, நான் உமக்காக சரிசெய்ய விரும்புகிறேன். இப்பொழுது, இது முதற்கொண்டு, அந்த எதிர்மறையான காரியங்களைக் கொண்டிருக்க வேண்டாம்; இது முதற்கொண்டு அது நேர்மாறாக இருக்கட்டும். நீர் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர் என்று விசுவாசிக்கிறீரா? உம்முடைய தொண்டையில் அது இருக்கிறது, உமக்கு மிக மோசமான தொண்டை பிரச்சனை இருக்கிறது. உமக்கும் கூட, ஒரு வளர்ச்சி இருக்கிறது, அது உமது கழுத்தில் இருக்கிறது. அது சரி அல்லவா? அவர் இப்பொழுது உம்மைச் சுகப்படுத்தப் போகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாரும். 97. வானங்களையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தாவே, இந்தப் பிசாசு கண்களால் காணக்கூடாதபடி மறைந்திருந்தான், ஆனால் அது உம்மிடத்திலிருந்து மறைந்திராது. சரியாக அவன் எங்கேயிருக்கிறான் என்று உமக்குத் தெரியும், இப்பொழுது அவன் அம்பலமாக்கப்பட்டு விட்டான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், மூச்சுவிடமுடியாதபடி செய்யும் இந்த ஆவி இந்தப் பையனை விட்டு விலகும்படி நான் கட்டளையிடுகிறேன்; அது இவனை விட்டு வெளியே வருவதாக, தேவ குமாரனாகிய, இயேசுவின் நாமத்தில், இவன் சுகமடைவானாக. ஆமென். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது சென்று, சுகமாயிரு. நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். ஆமென். சரி... கொண்டு வாருங்கள். 98. இங்கே ஒல்லியாக ஒரு பெண்மணி நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள்; அவள் மிகவும் ஒல்லியாக இருக்கிறாள், அவள் கண்ணாடிகளை அணிந்திருக்கிறாள். அவள் ஏதோவொன்றினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள், அவள் விறைத்து போயிருக்கிறாள். அது கீல்வாதம், அவளுக்கும் கூட கல்லீரல் கோளாறு இருக்கிறது, அவளுடைய கல்லிரலில் கோளாறு இருக்கிறது, அவளுக்கு சிறுநீர்ப்பை கோளாறும் இருக்கிறது. இப்பொழுது, சற்று பொறுங்கள். அந்த சீமாட்டியை நான் கண்டேன், அவள் ஏதோவொரு இடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எங்கோவிருக்கும் அந்த சீமாட்டியை நான் கண்டுபிடிக்கும் வரையில். அது தொடர்ந்து என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது..... ஓ, இதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்.... அதோ அவர்களுக்கு இறகு காணப்படுகிற ஊதா நிறத்தில் காணப்படும் தொப்பியை இருக்கிறது. சீமாட்டியே, அதுதானே உன்னுடைய வியாதிகள்? சுகமடையும்படியாக, ஜெபித்துக்கொண்டு, அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள் தானே? சரி, நீங்கள் இப்பொழுதே சுகமடைந்து விட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் வீட்டிற்குப் போகலாம். நீ என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று அவர் எனக்கு வெளிப்படுத்தி விட்டார். சுகமடையும்படியாக, நீ வேண்டிக்கொள்ளவில்லையா, அல்லது நீ ஜெபத்தில் ஏதோவொன்றைக் கொண்டிருக்கிறாயே? நீ இப்பொழுதே வீட்டிற்குச் சென்று, சுகமாகு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வெறுமனே தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிரு. 99. அதோ அவர் இருக்கிறார், சரியாக அங்கே. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சீமாட்டியே, அந்த சைனஸ் பிரச்சனையிலிருந்து (sinusitis) விடுதலை பெற நீ விரும்புகிறாயா? நீ இந்தவிதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாய், நீ மிகவும் உத்தமமாக இருந்து, ஜெபித்துக் கொண்டிருந்தாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 100. சகோதரியே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவிதத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீயும் கூட சுகமடைய விரும்புகிறாயா? உ-ஊ, ஆமாம். நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அவ்வாறு விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ பட்டணத்திற்கு வெளியிலிருந்து வருகிறாய், இல்லை, நீ வேறொரு மாகாணத்திலிருந்து வருகிறாய். நிறைய ஏரிகள் இருக்கும் இடத்திலிருந்து நீ வருகிறாய், அது - ஒரு - அது ஒரு - ஒரு தேவதாரு மரங்களாக இருக்கின்றன; அது - அது மிச்சிகன், நீ மிச்சிகனிலிருந்து வருகிறாய். உனக்கு இருதயக்கோளாறு இருக்கிறது, உனக்கு உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறது. உனக்குப் பக்கத்தில் ஒரு வாலிப பெண் நின்று கொண்டு இருப்பதை நான் காண்கிறேன், அவளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது, ஒரு மருத்துவர் அவளுடைய கையைச் சுற்றிலும் ஒரு காரியத்தை வைக்கிறார்; அவள் தன்னுடைய டீன்ஏஜ் பருவத்தில் இருக்கிறாள், அவள் நிச்சயமாக உன்னுடைய மகளாகவோ அல்லது ஏதோவொன்றாக இருக்க வேண்டும். அது உண்மை அல்லவா? அவள் இங்கே இருக்கிறாள், அது நீ தான். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி, உங்கள் கரங்களை ஒருவர் கரங்களை மற்றவர் கரங்களில் போடுங்கள், அதோ அவள் இருக்கிறாள், சரி, உங்கள் கரங்களை ஒருவர் கரங்களை மற்றவர் கரங்களில் போடுங்கள், நாம் ஜெபிப்போம். பிதாவே, அவர்கள் தாமே வீட்டிற்குச் சென்று, சுகத்தைப் பெற்றுக்கொள்வார்களாக, உமது மகிமைக்காக, உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், நான் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். இதை அருளும், கர்த்தாவே. ஆமென். 101. இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இருவரும் வீட்டிற்குச் சென்று, சுகமாயிருங்கள். நாம், "தேவனுக்கு நன்றி" என்று கூறுவோம். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், விசுவாசத்தை மாத்திரம் கொண்டு இருங்கள், செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்பது எல்லாம் அவ்வளவு தான். 102. எப்படியிருக்கிறீர்கள், சகோதரியே? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வமாக உதவி செய்கிறவளாக (mercy mission) இருக்கிறாய். உனக்கு அருகில் வசிக்கும் யாரோ ஒருவர் இருக்கிறார் அல்லது.... அது உன்னுடைய அண்டை வீட்டார். நீ இந்தப் பெண்மணிக்காகத் தான் நின்று கொண்டிருக்கிறாய், அவள் மரித்துக் கொண்டு இருக்கிறாள், அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது. உன்னுடைய கைக்குட்டையை என்னிடம் கொடு. 103. ஜீவனின் பிறப்பிடமான தேவனே, மரணம் அந்தப் பெண்மணியை விட்டுப் போவதாக. உம்முடைய வேதாகமத்தின் ஞாபகார்த்தமாக, மரித்துக் கொண்டிருக்கிற அந்த நபரின் மேல் வைக்கும்படியாக, இந்தக் கைக்குட்டையை ஆசீர்வதிக்கிறேன். மரணம் தாமே அவளுடைய படுக்கையை விட்டுப் விலகிப் போவதாக, உமது மகிமைக்காக அவளை விடுவித்தருளும் உமது குமானாகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 104. இதை அவள் மேல் வை, நீ இதை அவள் மேல் வைப்பது மட்டுமாக, வேறு எதுவும் அவளைத் கஷ்டப்படுத்தாது இருக்கட்டும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. [அந்த சகோதரி, சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறாள் - ஆசிரியர்.) ஆமாம். உ-ஊ. அவ்வாறு செய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரிதான். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக....?.... நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? பயபக்தியாயிருங்கள். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாக இருங்கள். சந்தேகப்படாதீர்கள், விசுவாசியுங்கள். "விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? 105. சீமாட்டியே, அந்த குடல் சம்பந்தமான கோளாறு உன்னைவிட்டுப் போய்விட்டது, பெருங்குடல் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனை. சரியாக அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்கள் தான். அப்படியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் அதைச் சரியாக கொண்டிருப்பீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக. 106. சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த சீமாட்டி... திருமதி. உட் அவர்களுக்கு அடுத்து இருக்கிறவள், சற்று மேலே. அது, இல்லை, அது சைனஸ் பிரச்சனை இருக்கிற வயது முதிர்ந்த சீமாட்டி, பல்வர்ண கட்டம் போட்ட வஸ்திரம் அணிந்தவர்களாய், அந்த சிறியவர்களோடு அங்கே கடைசியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்கள். சரி, சகோதரியே, உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமாம், அது சரியே, உங்களுக்கு சைனஸ் தொல்லை இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 107. ஐயா, அது நாற்காலியில் இருந்த நீங்கள் என்று நான் நினைத்தேன். இப்பொழுது தொடர்ந்து விசுவாசித்துக்கொண்டே இருங்கள். அந்த ஒளியானது அங்கே உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறது. அது உங்கள் மேல் இருந்தது என்று நீங்கள் அறிவீர்கள். அது அங்கேயிருக்கும் உங்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது, நீங்கள் அதை உணர்ந்து கொண்டீர்கள். ஊக்கமிழந்து போகாதீர்கள். 108. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தீர்க்கதரிசி வெறுமனே அவருடைய பிரசங்கியாக இருக்கிறான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சுகப்படுத்தும்படியாக தேவன் இங்கேயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது, சீமாட்டியே. உங்களைச் சுகப்படுத்த எனக்கு எந்த வழியும் இல்லை, ஆனால் தேவனால் உங்களைச் சுகப்படுத்த முடியும், அவரால் முடியாதா? நாம் அந்நியர்களாக இருக்கிறோம், நாம் அவ்வாறு இல்லையா? 109. இந்த கூட்டத்தில் இருக்கும் ஜனங்கள் அறியும்படி நான் விரும்புவது என்னவென்றால், தேவன் இந்தப் பெண்மணியைச் சுகப்படுத்தி, இவளுக்கு வெளிப்படுத்தி, இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்றைச் செய்வாரானால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களா? ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்வீர்களா? எத்தனை பேர் அதைச் செய்வீர்கள்? அப்படியே, "நான் - நான் வியாதியாயிருக்கிறேன், நான்..” என்று கூறுங்கள். அது - அது ஆகிவிட்டது, நான் அப்படியே மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறேன், என்னால் இங்கே நின்று கொண்டிருப்பதே கஷ்டமாக இருக்கிறது, நீங்கள் பார்க்கிறீர்கள். சரி. 110. நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். நான்..... அந்த பெண்மணிகளில் இரண்டு பேர் அங்கே இருந்தீர்களா? நீர் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பெற்று இருக்கிறீர்கள், உங்களுடைய கோளாறு உங்கள் காதில் இருக்கிறது. நீங்கள் - உங்களுக்கு காதில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, அது இன்னும் பாய்ந்து கொண்டிருக்கிறது, அது குணமாகவில்லை. நீங்கள் போராட்டத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள், இல்லையா? உங்களுக்கு போராட்டம் இருக்கிறது, நீங்கள் இப்பொழுது போகிறதைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு சபைக்குத் தான் நீங்கள் வழக்கமாகப் போகிறீர்கள். நீங்கள் வழக்கமாக ஒரு கிறிஸ்தவ சபைக்குச் செல்கிறீர்கள். அது சரிதானா? நீங்கள் ஏதோவொரு சதுக்கத்திற்கு அருகில் இருந்தீர்கள், அது ஒரு - அது ஒரு வானொலி, ஒரு ஊழியக்காரர் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதை நீங்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அங்கே உள்ளே, நீங்கள் அந்த கிறிஸ்தவ சபையிலிருந்து, ஒரு முழு சுவிசேஷ சபைக்குச் சென்றீர்கள், நீங்கள் இரட்சிக்கப்பட்டு, நிரப்பப்பட்டீர்கள். நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஊழியக்காரர் சகோதரன் விப்பர்ட் அவர்கள், அவருடைய பல்லின் பக்கவாட்டிலிருந்து ஒரு துண்டு உடைந்து வந்து விட்டது, நான் அதைக் காண்கிறேன். அது சரிதானா? அந்தக் காரியங்கள் சத்தியம் தானா? இங்கே வாருங்கள். 111. ஓ தேவனே, வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவரே, எல்லாவற்றையும் நன்றாகவும் நலமாகவும் உண்டு பண்ணினவரே, நீர் அதனோடு மகிழ்ச்சியாயிருந்தீர். ஆனால் சாத்தானோ அந்தக் காரியங்களை கெடுத்துப் போட்டான். ஆனால் சாத்தான் பாழாக்கிப் போட்ட அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் சரிசெய்யும்படியாகவே உமது குமாரனை நீர் அனுப்பியிருக்கிறீர். இன்றிரவு எங்கள் சகோதரிக்கு உதவி செய்யும். கர்த்தாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும். நீர் வார்த்தையில், "அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்தால், அவர்கள் சொஸ்தமடைவார்கள்” என்று எங்களுக்குப் போதித்திருக்கிறீர். எனவே, இவளுக்கு இடையூறு கொடுக்கிற இந்தப் பொல்லாங்கானது இந்தப் பெண்மணியை விட்டு வெளியே வரும்படி வேண்டிக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இது இவளை விட்டு விலகுவதாக, இவள் சுகத்தைப் பெற்றுக்கொள்வாளாக. தேவனுடைய மகிமைக்காக, நான் இதைக் கேட்கிறேன். ஆமென். சகோதரினே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ உன்னுடைய பாதையில் இரு, நீ சரியாகப் போகிறாய். இந்தக் கைக்குட்டைகளின் பேரில், நாம். வாருங்கள், அவைகளைக் கொண்டு வாருங்கள். நான் கைக்குட்டைகளுக் காக ஜெபித்து விட்டேனா? இந்தக் கைக்குட்டைகளுக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டு விட்டது. 112. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களைச் சுகப்படுத்தப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் போய், இரவு உணவு சாப்பிடுங்கள், உங்களுடைய வயிற்றுக் கோளாறு உங்களை விட்டுப் போய் விட்டது. நீங்கள் போய், சுகமடையலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம், "தேவனுக்கு நன்றி" என்று கூறுவோம். இப்பொழுது, நீங்கள் எல்லாரும் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். சரி, வாருங்கள். அந்தச் சிறு பெண்மணிணை கொண்டு வாருங்கள், அந்தப் பிள்ளையைக் கொண்டு வாருங்கள். ஆஸ்துமா வியாதியானது இந்தப் பிள்ளையை விட்டுப் போய் விடும் என்று விசுவாசிக்கிறாயா, அது சரியாகி விடும் என்றும் அவர் அதை உரைத்து விட்டார் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவன் அதை ஆசீர்வதிப்பாராக, அது தாமே போய் சுகமடைவதாக. ஆமென். மேலும், தேவனே, அதோ போல் இவளுக்கும், இயேசுவின் நாமத்தின் மூலமாக, இவர்கள் இருவரும் சுகமடைவார்களாக. ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. போய் உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டிரு. ஆது இந்தப் பிள்ளையை விட்டு விலகப் போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன், உங்கள் இருவருக்குமுள்ள, உங்கள் கோளாறும் கூட, போய்விட்டது. 113. சரி, வாருங்கள், சீமாட்டியே. இந்தவிதமாகப் பாருங்கள். உங்களுக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கிறது. நீங்கள் அதிலிருந்து குணமடைய விரும்புகிறீர்களா? நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொபது அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருங்கள், அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் வேண்டிக்கொள்வதைக் கொண்டிருப்பீர்கள். 114. சீமாட்டியே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே வாருங்கள். நீங்கள் அந்த அறுவை சிகிச்சையை தவிர்க்க விரும்புகிறீர்களா? அறுவை சிகிச்சை இல்லாமலே தேவன் அந்தக் கட்டியை எடுத்துப் போடுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் போங்கள். ஆமென். ஆமென். 115. சரி. வாருங்கள், சீமாட்டியே. நீங்கள் இருக்கும் இடத்திலேயே நில்லுங்கள்! உங்கள் கரத்தை உயர்த்துங்கள்! "நான் இயேசுவை ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய கீல்வாதம் போய்விட்டது," என்று கூறுங்கள். இப்பொழுது உங்கள் கால்களை உதைத்துப் பாருங்கள், மேடையின் குறுக்காக வந்து, ஒரு வாலிப பெண்ணைப் போன்று நடவுங்கள். வாருங்கள், வாருங்கள், உங்களால் அதைச் செய்ய முடியும், வாருங்கள். தேவன் உங்களைச் சுகப்படுத்தி விட்டார், ஆமாம், அங்கே தான் காரியம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவ்விதமாகத்தான் போக வேண்டும். நீங்கள் போய், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமடையுங்கள். நாம், "தேவனுக்கு துதி உண்டாவதாக” என்று கூறுவோம். சரி இதோ ஒரு செவிடான மனிதர் இருக்கிறார். தயவு செய்து, எல்லாரும் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். 116. ஓ தேவனே, ஜீவனின் காரணகர்த்தாவே, ஒவ்வொரு நல்ல ஈவுகளையும் அருளுபவரே, உமது ஆசீர்வாதத்தை இந்த மனிதரின் மேல் அனுப்பும். இப்பொழுது, இவரால் சுவிசேஷத்தைக் கேட்க முடியவில்லை, ஒருக்கால் இவர் மேல் இந்த செவிட்டு ஆவி இருக்கலாம். ஆனால் கர்த்தாவே, "விசுவாசம் கேள்வியினாலே வருகிறது,” இவரால் கேட்க முடியவில்லை, எனவே கர்த்தாவே, இந்தப் பிசாசை தோற்கடிக்கும்படியான வல்லமையை எனக்கு இப்பொழுது தாரும். பிசாசே, இவரை விட்டு போ. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவரை விட்டு வெளியே வா...?.... 117. நான் கூறுவது உமக்குக் கேட்கிறதா? நீர் கர்த்தரை நேசிக்கிறீரா? உம்முடைய முழு இருதயத்தோடும்? அவர் அற்புதமானவர் இல்லையா? கர்த்தருக்கு துதி உண்டாவதாக. "நான் அவரை நேசிக்கிறேன்" என்று கூறும். நீர் அவரை உம்முடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறீரா? நீர் எப்போதுமே அவரை நேசித்து வருகிறீரா? நீர் இப்பொழுது சுகமாயிருக்கிறீர். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தொடர்ந்து போய், தேவனுக்காக எதையாகிலும் செய்யுங்கள். நாம், "தேவனுக்கு நன்றி” என்று கூறுவோம். மற்ற எதைக் காட்டிலும் அதிக ஜனங்களை கொல்லுகிற, உலகத்திலேயே மிக மோசமான வியாதி; ஆனால் உங்களுடைய இருதயக் கோளாறை குணப்படுத்தும்படியாக, இயேசு கிறிஸ்து இங்கேயிருக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீர் சுகமடைவீர்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் வருகையில், விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய கொலையாளி புற்று நோய் தான். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவர் உங்களைச் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 118. இந்தப் பெண்மணியைக் கட்டி வைத்திருக்கிற சாத்தானே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவளை விட்டு விலகும்படியாக, இவளை விட்டு வெளியே வரும்படியாக, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் (adjure). போ! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்மணியை விட்டு விலகு. ஆமென். 119. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நோக்கிப் பார், மருத்துவர் கூறினதின்படி, நீர் மரிக்கத்தான் வேண்டும், ஆனால் கிறிஸ்து கூறினதின்படி, நீ பிழைக்கிறாய். நீ அவரை விசுவாசிக்கிறாயா? சரி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது உன்னால் உன்னுடைய சுகத்தைக் கொண்டிருக்க முடியும், நீ சுகமடையப் போகிறாய், நீ ஒரு இயல்பான வாழ்க்கையை வாழப் போகிறாய். நாம், கர்த்தருக்கு துதி உண்டாவதாக” என்று கூறுவோம். 120. எத்தனை பேர் சுகமடைய விரும்புகிறீர்கள்? எழுந்து நில்லுங்கள். சகோதரனே, இங்கே வாருங்கள். சகோதரியே, நீ உள்ளே வரவில்லை, நீ வந்தாயா? இங்கே வா. நீ விசுவாசிக்கிறாயா? சரி, உன்னுடைய முதுகு கோளாறு உன்னை விட்டுப் போய் விட்டது. நீ மேடையை விட்டு போய், சுகமடையலாம். சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, இங்கே வாருங்கள். 121. பரலோகப் பிதாவே, இப்பொழுது இரக்கமாயிரும். நீர் சகலத்தையும் அறிந்திருக்கிறீர், பெரிய தேவையை நீர் அறிவீர், இங்கேயிருக்கிற ஜனங்களை நீர் அறிந்திருக்கிறீர், உம்மால் கூடுதலாக என்ன செய்ய முடிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். மன்னிப்பிற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன், இவைகள் எல்லாவற்றிற்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்த வேண்டுமென்று இப்பொழுது ஜெபிக்கிறேன். தேவனுடைய வல்லமை தாமே இவர்கள் மேல் இருப்பதாக, இங்கே மேடையின் மேல் இருந்து வருகிற அதே பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது இந்தக் கூட்டத்தினரின் குறுக்காக அசைவாடி, ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, அவர்களைச் சுகப்படுத்துவதாக. உங்கள் தலைகள் வணங்கியிருக்கையில், உங்கள் இருதயங்களும் தேவனை நோக்கியிருக்கையில்... சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, உமக்கு விருப்பமானால், தொடர்ந்து ஜெபத்தைச் செய்வீரா, நீர் அவ்வாறு தொடர்ந்து ஜெபிப்பீரா-?